அரியலூர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு
X
அரியலூர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி ஒருவர் உயிரிழந்தார்,

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 510 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 86பேர். இன்றுவரை 6316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 5752 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இன்று ஒருவர் உயிரிழப்பு. இதுவரை 54பேர்உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 407 பேர். இதுவரை 1,72325 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 6316 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,66,009பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 8355, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,21,833 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 23,237 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 841 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 22216 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 180பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 580பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 445 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 135பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.

நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 23இடங்களும், பேரூராட்சியில் 2 இடங்களும், நகரப்பகுதியில் 7 இடங்களும் சேர்த்து 31 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!