ஏ.சி பஸ்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை.
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் அரசு பஸ்களில் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால்தான் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று 2 வது அலை வீசதொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி அரசு போக்குவரத்து கழகங்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு போக்குவரத்து கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும் ஏ.சி பஸ்களில் 65 வயதுக்கு மேல் உள்ள பயணிகள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை பின்பற்றி பயணம் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu