சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் - காவல் ஆணையர்

சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் -  காவல் ஆணையர்
X
சென்னையி்ல் பாதுக்பாப்பு பணியில் நாளை முதல் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். என்று மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 10 காலை 4 மணி முதல் மே.24 காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தி உத்திரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன. 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!