டாக்டரானார் யுவன் சங்கர் ராஜா..!

டாக்டரானார் யுவன் சங்கர் ராஜா..!
X
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சத்தியபாமா பல்கலை., கவுரவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி, சற்றேறக்குறைய இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அப்பாடல்களுக்காக யுவனை உச்சிமுகர்ந்து தூக்கிப்பிடித்து கொண்டாடுகிறார்கள்.

ஆயினும், யுவனுக்கு தேசிய விருதுகள் போன்ற தகுதியான விருதுகள் வழங்கப்படவில்லையே என்கிற ஏக்கம் அவரது ரசிகர்களின் நெஞ்சத்தை விம்மச் செய்தது. இந்தநிலையில்தான், சென்னை செமமஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்த் திரையுலகிற்கு யுவன் ஆற்றியுள்ள இசைப் பணியை ஊக்குவிக்கும் விதமாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்த இனிய நிகழ்வு இன்று(03/09/2022) சென்னையில் நிகழ்ந்தேறியது. விழாவில் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தரான மரியஜீனா ஜான்சன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். யுவனின் ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதகளமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!