தற்கொலைக்கு முயன்ற யூடியூபர் ஜி.பி. முத்து: அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் மரக்கடை வைத்து நடத்தி வந்தவர் ஜி.பி.முத்து. இவர் மரக்கடையில் பணியாற்றியது போக மீதமுள்ள நேரத்தில் டிக்டாக் செயலியில் வீடியோக்களை போட்டிருந்தார். நாளடைவில் இவரது வீடியோக்கள் உச்சத்தை தொட்டன.
இதனால் நிறைய சப்ஸ்கிரைபர்கள் அவருக்கு கிடைத்தனர். இதையடுத்து மரக்கடை தொழிலை விட்டுவிட்டு டிக்டாக் வீடியோவில் முழு வீச்சில் இருந்தார். டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் யூடியூபில் தனது திறமையை வெளிப்படுத்தினார். நெல்லை தமிழில் இவர் பேசுவது கேட்க கேட்க நன்றாக இருக்கும்.
இந்த வீடியோ மூலம் இவர் பெரிய அளவில் வந்துவிட்டார். வலிமை படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியவில்லை என கூறி அவராகவே வெளியேறிவிட்டார். கடை திறப்பு விழா, சிறப்பு விருந்தினர் என கலக்கி வரும் ஜிபி முத்து கிடைத்த வருமானத்தில் சொகுசு காரை வாங்கியுள்ளார். அத்துடன் தான் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் கிடைக்கும் தொகையில் இல்லாதவர்களுக்கு உதவிகளை செய்கிறார்கள். அந்த வகையில் அவர் தூத்துக்குடி பெருமழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தை அடுத்த உடன்குடியை சேர்ந்தவர் முத்து. அவருக்கு பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு எப்படி இருக்கிறது என்பது நன்றாக தெரிந்திருக்கிறது. இதுகுறித்து ஜி.பி.முத்து ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வரலாறு காணாத மழையால் நான் இருக்கும் உடன்குடி அதிகம் பாதிப்பில்லை. ஆனால் ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருக்கிறது. நான் காரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தேன். ஏரல், ஆத்தூர் ஆகிய இடங்களில் மிகப் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. அண்மையில் 4 வருஷத்துக்கு முன்பு கட்டிய பாலமே இடிந்து போய்விட்டது. ஸ்ரீவைகுண்டம், கருங்குள்ம பகுதிக்கு சென்றபோது குழியில் என் கார் சிக்கிக் கொண்டது. என்னால் முடிந்த அளவுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வாங்கி கொடுத்துள்ளேன்.
கொரோனா காலத்தில் நான் தற்கொலை செய்ய முயற்சித்தேன்.ஆனால் என்னை மருத்துவமனையில் சேர்த்து என் வாழ்க்கையை காப்பாற்றிவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட என்னால் முடிந்த அளவுக்கு உதவினேன். நான் மட்டும் அல்லாமல் எனது குழந்தைகளையும் களத்திற்கு அழைத்து சென்று உதவி செய்ய வைத்தேன். சென்னை மழை வெள்ள பாதிப்பை டிவியில் பார்த்தேன். ஆனால் என்னால் நேரில் வந்து உதவ முடியவில்லை.
பாலா, அறந்தாங்கி நிஷா போன்றோர் உதவி செய்தார்கள். ஆனால் என்னால் வர முடியவில்லை, இப்போ நம்ம மக்கள் பாதிக்கப்பட்டாங்க , அதனால் நானும் உதவி செய்தேன். பாலாவும் நிஷாவும் தண்ணீருக்குள் இறங்கி சென்று பணியாற்றியதற்காகவே அவர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என ஜி.பி. முத்து தெரிவித்திருந்தார்.
ஜி.பி.முத்து வாயை திறந்தாலே கெட்ட வார்த்தைகள் வருவதாக சொன்னாலும் அவர் உண்மையில் மிகவும் நல்லவர். அவரது டிக்டாக் வீடியோவில் அவரை பார்த்த ரசிகர்கள், அவருடைய உடலில் இருந்த தழும்புகளை கவனித்தனர். இது குறித்து முத்துவிடம் கமென்டில் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில் எனக்கும் என்னுடைய தம்பிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க கூட மாட்டோம். எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்போம். ஒரு நாள் சண்டையிடும் போது தாயும், என்னுடைய தங்கையும் என்னை பிடித்துக் கொண்டனர்.
அப்போது எம் தம்பி பின்பக்கமாக வந்து என்னை பிளேடால் கீறிவிட்டு ஓடிவிட்டான். எனக்கு எதுவுமே தெரியவில்லை. பிறகு உடலில் எல்லா இடங்களிலிருந்தும் ரத்தம் கொட்டிய போதுதான் எனக்கு தெரிந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது அங்கு எனக்கு 175 தையல்கள் போடப்பட்டன. எல்லா தழும்புகளுமே இன்னமும் வெளியே தெரியும் படி இருக்கின்றன என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu