கதை, திரைக்கதை, வசனம் எழுதும் யோகிபாபு

கதை, திரைக்கதை, வசனம் எழுதும் யோகிபாபு
X
யோகிபாபு
Actor Yogi Babu -நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

Actor Yogi Babu -சில ஆண்டுகளுக்கு முன்பு சிரிப்பு நடிகர் வடிவேலு ஒரே நாளில் பல படங்களில் நடித்து உச்சக்கட்டத்தில் இருந்தார். அவர் நடிக்காத படங்களே இல்லை என்ற நிலை இருந்தது. கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இந்த நிலையில் டைரக்டர் சங்கரின் சொந்த தயாரிப்பான 23ம்புலிகேசி இரண்டாவது பாகத்தில் வடிவேலு நடிக்கும் போது பிரச்சினை ஏற்பட்டது. இந்த படத்தில் இருந்து நடிகர் வடிவேலு திடீரென்று விலகினார். பல முறை பேச்சு வார்த்தை நடந்தும் இந்த படத்தில் நடிக்க வடிவேலு மறுத்து விட்டார். இதனால் டைரக்டர் சங்கருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டது. வடிவேலு தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. படங்களில் நடிக்க எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வில்லை. அதால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக படம் எதுவும் நடிக்காமல் வடிவேலு வீட்டில் சும்மா இருந்தார். அப்போது நகைச்சுவை வேடங்களில் நடித்து கொண்டிருந்த சந்தானமும் கதாநாயகனாக நடிக்க சென்று விட்டதால் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகருக்கு ஆள் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.

இந்த நேரத்தில்தான் தமிழ் சினிமாவில் யோகிபாபு நுழைந்தார். சிறு சிறு நகைச்சுவை வேடங்களில் நடித்து படிப்படியாக முன்னேறினார். அவருடைய வித்தியாசமான தலைமுடியும், உருவமும் ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. அவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் சிரித்து விடுவார்கள். இதனால் யோகிபாபுக்கு படங்கள் குவிந்தன. தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரை ஒப்பந்தம் செய்தனர். மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக யோகி பாபு நடித்தார்.

தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக யோகிபாபு உள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அந்த படத்தில் கதாநாயகனா நடிக்க உள்ளார். இந்த படத்தை ரமேஷ் சுப்ரமணியம் டைரக்டர் செய்கிறார். இந்த படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் டைரக்டர்கள் கே.எஸ் ரவிக்குமார், மனோபாலா மற்றும் சிங்கம்புலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சிரிப்பு நடிகர், கதாநாயகனுக்கு நண்பன் என்று சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு கதாநாயகனா நடித்தார். இப்போது முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். இது சினிமா உலகில் அவருடைய வளர்ச்சியை காட்டுகிறது. அடுத்து யோகிபாபு ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான நண்பார்கள் கூறுகிறார்கள். யோகிபாபுவின் திறமையை அறிந்த சில தயாரிப்பாளர்கள் அவர் இயக்கும் படத்தை தயாரிக்கவும் தயாராக உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!