நவரசா படத்தில் இயக்குநருடன் பணிபுரிந்தது அற்புத அனுபவம்-நடிகை ரித்விகா

நவரசா படத்தில் இயக்குநருடன் பணிபுரிந்தது அற்புத அனுபவம்-நடிகை ரித்விகா
X

நடிகை ரித்விகா

தமிழ் ஆந்தாலஜி படமான 'நவராசா' படத்தில், பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார்.

ஆந்தாலஜி திரைப்படமான "நவரசா" திரைப்படத்தில் இயக்குநர்அரவிந்த் சுவாமியுடன் பணிபுரிந்தது, அற்புத அனுபவம் - நடிகை ரித்விகா !

தென்னிந்திய நடிகையும், பிக் பாஸ் வெற்றியாளருமான நடிகை ரித்விகா, Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான 'நவராசா' படத்தில், பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார்.

"நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், இந்திய தொன்மை விதிகளாக கூறப்படும், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள "ரௌத்திரம்" கதையில் 'அன்புக்கரசி' வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். நவரசங்களுள் கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. "நவராசா" 2021 ஆகஸ்ட் 6 ஆம் தேதி Netflix இல் உலகளவில் திரையிடப்படவுள்ளது.

அரவிந்த் சுவாமியுடன் இணைந்து பணிபுரிந்த, தனது அனுபவத்தைப் பற்றி ரித்விகா கூறியதாவது...,

அரவிந்த் சுவாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் மிகபெருமையயான தருணம். ஒரு நடிகராக இல்லாமல் இயக்குநராக அவரை அருகில் இருந்து பார்த்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு காட்சியை உருவாக்குவதில் அனைத்து தொழில் நுட்ப சாத்தியங்களையும் பயன் படுத்துவதில், தேர்ந்தவராக இருந்தார். சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது. இப்படத்திற்காக காட்சிகள் மற்றும் வசனங்களை ஒத்திகை செய்யும் ஆன்லைன் கூட்டங்களில் கலந்துகொண்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.

மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபாகேசன் இணைந்து நிறுவிய Justickets நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, "நவராசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!