திருமணத்துக்கு பிறகும் நடிப்பதை தொடர்வேன்-நடிகை ஹன்சிகா மோத்வானி

திருமணத்துக்கு பிறகும் நடிப்பதை தொடர்வேன்-நடிகை ஹன்சிகா மோத்வானி
X

தனது வருங்கால கணவருடன் ஹன்சிகா மோத்வானி.

Actress Hansika Mothvani News -நடிகை ஹன்சிகா மோத்வானி, மும்பை தொழிலதிபரான சோஹேல் கதூரியாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் நடிப்பை தொடருவேன் என கூறி உள்ளார்.

Actress Hansika Mothvani News -தமிழ்த் திரையுலகில் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமான புதிதில் அவரை, எல்லோரும் சின்ன குஷ்பு என்றே அழைத்து மகிழ்ந்தனர். மேலும், தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நாயகர்களான நடிகர் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி மற்றும் சிம்பு உள்ளிட்டவர்களுடன் நாயகியாக நடித்து, தனக்கென தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அத்துடன் முன்னணி நாயகியர்களில் ஒருவராக வளர்ச்சி பெற்று புகழுக்கும் பாராட்டுக்கும் உரியவராக கோலிவுட் ரசிகர்களின் கொண்டாட்ட நாயகியாக வலம் வருகிறார் ஹன்சிகா.


அண்மையில், நடிகை ஹன்சிகா மோத்வானிவுக்கு பிரமாண்டமாகத் திருமணம் நடக்கவிருப்பதாக, ஒரு சில தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின. வெளியான செய்திகள் உண்மைதான் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டினாற்போல, நடிகை ஹன்சிகா மோத்வானி தன் வருங்காலக் கணவர் யார் என்பதை ஒட்டு மொத்த உலக மக்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் அறிமுகப்படுத்தியுள்ளார் ஹன்சிகா மோத்வானி.

அத்தகவலின்படி, நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான சோஹேல் கதூரியாவை வரும் டிசம்பர் நான்காம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள சுமார் 450 வருடங்கள் பழைமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்துகொள்ள உள்ளார். தனிப்பட்ட முறையில், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்தத் திருமணம் நிகழ உள்ளது.

நடிகை ஹன்சிகா மோத்வானியின் பதினோறாவது வயதில் இருந்தே ஹன்சிகாவின் குடும்பமும் சோஹேல் கதூரியாவின் குடும்பமும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இருவரும் தற்போது திருமண பந்தத்தில் நுழையப் போவதால் இனி இருவரது குடும்பங்களும் நண்பர்கள் என்கிற வட்டத்தைக் கடந்து உறவுகள் என்கிற புதிய பயணத்தில் ஒன்று சேரப்போகின்றன.

ஒரு சில நடிகைகள் திருமணத்துக்குப் பிறகு நடிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கிவிடுகின்றனர். ஆனால், விதிவிலக்காக சிலர் நடிப்பதை நிறுத்தாமல் தொடர்கின்றனர். அந்தவகையில், நடிகை ஹன்சிகா மோத்வானி, திருமணத்துக்குப் பிறகும் தனது நடிப்புத் தொழிலை நிறுத்தாமல் தொடரவிருக்கிறாராம். எந்த ஒரு தொழிலும் மதிப்புமிக்கதுதான் என்று உறுதியாக நம்புவதோடு, செய்யும் தொழிலை தெய்வமென மதிக்கும் குணத்தைக் கொண்ட ஹன்சிகா, தனது திருமணம், தான் செய்துகொண்டிருக்கும் நடிப்புத் தொழிலுக்கு ஒருபோதும் தடையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது நடிகை ஹன்சிகா மோத்வானி 'பார்ட்னர்', 'ரவுடி பேபி', 'மை நேம் ஈஸ் ஸ்ருதி', '105', 'கார்டியன்' மற்றும் 'எம்ஒய்3' ஆகிய திரைப் படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இவற்றில் படப்பிடிப்பு நிறைவடைந்த திரைப் படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்தான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, இன்னும் தலைப்பிடப்படாத திரைப் படங்களின் இயக்குநர்களான இகோர் மற்றும் கண்ணன் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும் தேவையான நாட்களை ஒதுக்கித் தந்துள்ளாராம் ஹன்சிகா. ஏற்கெனவே, பல்வேறு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்குப் பிறகும் அந்த செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்கின்றனர் ஹன்சிகாவின் நெருங்கிய வட்டாரத்தினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!