AK62 ல இருந்து அவர் வெளியேற்றப்பட்டதுக்கு இதுதான் காரணமாம்!
அஜித்குமார் 62 படத்திலிருந்து தான் வெளியேற்றப்பட்டதற்கு இதுதான் காரணம் என ஓபனாக கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். அதுமட்டுமின்றி ஒரு ரசிகராக அஜித்குமாரை இயக்குவதை மிஸ் பண்ணுவது உண்மைதான் என்றாலும் அந்த வாய்ப்பு அந்த இயக்குநருக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிதான் என்று AK 62 Director யார் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த புதிய படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கியது. ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் ஷூட்டிங் துவங்குவதாகவும், மும்பையில் இந்த முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் பேசப்பட்டது. கூடுதலாக அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடக்கலாம் என்றும் தகவல் வெளியானது.
துணிவு பட ரிலீஸுக்கு பிறகு இதுகுறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அதிர்ச்சிகரமாக அந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டார் என்கிற தகவல்தான் அவர்களுக்கு கிடைத்தது. இதனை பல்வேறு மீடியாக்களும் பேசியிருந்தாலும் லைகா தரப்பிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. விக்னேஷ் சிவனும் இதுகுறித்து வெளியில் பேசவில்லை.
இந்த விசயங்களை அதன்பிறகு சில சினிமா ரிப்போர்ட்டர்கள் வெளிக்கொண்டு வந்தனர். பலர் தங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி வந்தனர். அதில் விக்னேஷ் சிவனுக்கு அஜித்துக்கும் சண்டை என்றும் லைகா விக்னேஷ் சிவனை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டது என்றும் கூறினார்கள். நயன்தாரா விக்கிக்காக அஜித்திடம் பேசி பார்த்தார் எனவும் அஜித் மறுக்கவே அவர் படத்தில் இனி நடிப்பதில்லை என முடிவெடுத்துவிட்டதாகவும் பலர் பேசி வந்தனர். இருந்தாலும் விக்னேஷ் சிவன் என்ன காரணத்துக்காக வெளியேறினார்.
லைகா தரப்பிலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்படவே, லைகாவுக்கு நெருக்கமாக இருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி தங்களுடன் இணைந்து ஏற்கனவே பணிபுரிந்த மகிழ் திருமேனி குறித்து பேசியிருக்கிறார். அவரை பரிந்துரையும் செய்திருக்கிறார் என்பதால் உடனேயே இவரது கதையை அஜித்திடம் எடுத்து செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இவர் ஏற்கனவே விஜய்க்கு கதை சொல்லியிருப்பதை தெரிந்துகொண்ட அஜித், நமக்கு அந்தமாதிரி ஏதும் கதை இருக்கிறதா என கேட்டிருக்கிறார்.
மகிழ் திருமேனி விஜய்க்கு சொன்ன கதையில் ஆக்ஷன் கதை ஒன்றை அஜித்துக்கு கூற அவர் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆக்ஷன் காட்சிகளை சேருங்கள் எனவும் குடும்பங்களுக்கு பிடிக்கும் வகையில் செண்டிமெண்ட் காட்சிகளை கூடுதல் அழுத்தமாக மாற்றவும் கேட்டிருக்கிறார் என செய்தி ஊடகங்களிலும் யூடியூப் சேனல்களிலும் சினிமா ரிப்போர்ட்டர்கள் பேசிக் கொண்டு இருக்க, தற்போது விக்னேஷ் சிவனே நேரடியாக இதற்கான பதிலை அளித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியிருக்கிறார் விக்னேஷ் சிவன். தயாரிப்பு தரப்பிடம் கதை கேட்டபோது தான் சொன்ன இரண்டாவது பாதி அவர்களுக்கு சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. இதனால் படத்திலிருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது. இந்த வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அதைக் காண காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu