நடிகர் விஜய்க்கு இதுவரை 'ஃபில்ம் பேர்' விருது கிடைக்காதது ஏன்?

நடிகர் விஜய்க்கு இதுவரை  ஃபில்ம் பேர் விருது கிடைக்காதது ஏன்?
X

vijay news, vijay latest newsநடிகர் விஜய்.

Vijay News -நடிகர் விஜய்க்கு இதுவரை 'ஃபில்ம் பேர்' விருது கிடைக்காதது ஏன்? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

Vijay News -இந்திய திரைப்படத்துறை வரலாற்றில் தமிழ் திரைப்படங்களுக்கு என்று எப்போதுமே தனி மரியாதை உண்டு. தமிழ் திரைப்படங்கள் பல உலக அளவில் இனம், மொழி, மதம், நாடு என்ற எல்லைகளை எல்லாம் தாண்டி பெரிய அளவில் வசூலை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. தமிழ் நடிகர்கள் பலர் இங்கிலாந்து, ஜப்பான், கனடா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

vijay news, vijay latest newsஉலக அளவில் பேசப்படும் தமிழ் படங்கள் மற்றும் அதில் கதாநாயகனாக கதாநாயகியாக நடித்த நடிகர் நடிகைகளுக்கு அவ்வப்போது விருதுகள் வழங்கி பாராட்டப்படுவது உண்டு. தமிழ் திரைப்பட துறை வரலாற்றைப் பொறுத்தவரை இந்திய அளவில் மிக பிரபலமான ஒரு விருதாக கருதப்படுகிற 'ஃபில்ம் பேர்' விருது பல முக்கிய நடிகர்கள் வாங்கி உள்ளனர். இதுவரை அந்த விருதை எம். ஜி. ஆர். சிவாஜி, ஜெமினி கணேசன், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன், பாக்கியராஜ், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், அஜித்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், மாதவன், விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோர் தமிழ் திரைப்பட துறையில் இருந்து ஃபில்ம் விருது பெற்று இருக்கிறார்கள்.

vijay news, vijay latest newsஆனால் தமிழ் திரை உலகில் இளைய தளபதி என போற்றப்படும் மிக முக்கியமான நடிகரான விஜய் இதுவரை ஒரு முறை கூட ஃபில்ம் பேர் விருது வாங்கவில்லை. ஃபில்ம் பேர் விருது பட்டியலில் அவர் பெயர் இதுவரை இடம்பெறவில்லை. விஜய் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் .விஜய்க்கு என்று தமிழ் சினிமாவில் தனி ரசிகர் வட்டாரம் உள்ளது. வசூலிலும் அவரது படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன. இந்த நிலையில் அவர் இதுவரை ஃபில்ம் பேர் விருது வாங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை அரசியல் ரீதியான காரணம் இதுவும் இருக்குமா என்றும் அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

vijay news, vijay latest newsநடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் உலக அளவில் மிக சிறந்த நடிகர் என பெயர் பெற்றிருந்தாலும் விருதுகள் வாங்கி இருந்தாலும் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவரது இறுதி காலத்தில்தான் பெற முடிந்தது. அதேபோல தான் எங்கள் தளபதியும். ஃபில்ம் பேர் விருது இல்லை என்றால் என்ன அவருக்கு ஆதரவாக கோடிக்கணக்கான ரசிகர்களாகிய நாங்கள் இருக்கிறோம். சிவாஜியை போல் அவரும் எங்கள் மனம் கவர்ந்த நடிப்புலக சக்கரவர்த்தி தான் என கூறுகிறார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!