ஏன் எடுத்தீங்க? நல்லாத்தானே இருக்கு.. சூரரைப்போற்று நீக்கப்பட்ட காட்சி..

Actor suriya’s soorarai pottru deleted fight scene
X

Actor suriya’s soorarai pottru deleted fight scene-படத்தில் நீக்கப்பட்ட சண்டை காட்சி படம்.

Soorarai Pottru Movie - சூரரைப்போற்று படத்தில் நீக்கிய சண்டைக் காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Soorarai Pottru Movie - திரைப்பட இயக்குனர் சுதா கொங்கரா, மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் தமிழில் துரோகி, சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய சூரரைப்போற்று நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் ஒடிடியில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியிடப்பட்டது.

அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், மறைந்த நடிகர் பூராம், மோகன்பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கரா தற்போது இந்தி ரிமேக்கில் இயக்குகிறார். தமிழில் நடித்த சூர்யா ரோலில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். அபர்ணா பாலமுரளியின் ரோலில் நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். இவர் பிரபல இந்தி சீரியல் நடிகை. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிந்துள்ள நிலையில், தற்போது படத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சண்டை போடுவது படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மாறன் வேடத்தில் சூர்யா நடித்திருப்பதை பார்த்த ரசிகர்கள், சண்டைக்காட்சி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறுவதுடன், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த காட்சி ஹிந்தி ரீமேக்கில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 5 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!