சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் முழுக்கதையும் லீக் ஆகி உள்ளது
ஈ சி ஆர் ரோட்டில் புது பங்களா வாங்கிப்புட்ட ஆக்டர் சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் டைரக்ஷனில் வெந்து தணிந்தது காடு படம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையில் இதன் முழு ஷூட் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஜூன் மாதம் படம் வெளியாகும் என ட்விட்டர் பக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கார்.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் முழுக்கதையும் தற்போது லீக் ஆகி உள்ளது. அதாவது வில்லேஜ் ஒன்றில் சிம்பு கூலி வேலை செய்கிறார். அவருக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. அதனால் தனது அம்மா மற்றும் தங்கையை காப்பாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதற்காக மும்பைக்கு வேலை செய்கிறார். அப்போ ஏர்பட்ட பழக்க வழக்கத்தால் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகிறது. அதனை எப்படி சமாளித்து தன்னை ஒரு ஹீரோவாக காட்டுகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதையாம்.
ஆக வெந்து தணிந்தது காடு படத்தின் கதையைப் பார்த்தால் பழைய ஸ்கிரிப்ட் போல இருந்தாலும் சிம்பு & கொளதம் மேனன் கூட்டணி மேக்கிங்-கை பார்ப்பதற்காகவே இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்காய்ங்க.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu