Small Boss யார் இந்த சுமால் பாஸ்?

Small Boss யார் இந்த சுமால் பாஸ்?
X
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7ல் சுமால் பாஸாக பேசிக் கொண்டிருப்பவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக சுமால் பாஸ் என்ற ஒருவரை அறிமுகம் செய்திருக்கிறார்கள். யார் இந்த சுமால் பாஸ் என்பது பலரும் தேடி வரும் பதிலாக இருக்கிறது. அது யார் என்பதைத் தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி அதிக டிஆர்பி பெறும் தொலைக்காட்சி விஜய் டிவிதான். அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டால் தொடர்ந்து 100 நாட்களுக்கு டிஆர்பி எகிறும். டிவி மட்டுமின்றி ஓடிடியிலும் ஒளிபரப்பாவதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். இதோ சீசன் 7 கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் முதல் நாளே அதிரடியாக சில சண்டைகள், வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிக்பாஸ் சீசன் 7 முதல் வாரத்திலேயே பிரமாதமாக சண்டைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் பிக்பாஸ். அதே நேரம் கலகலப்பாக செல்லும் வகையில் சில டாஸ்களுக்காக கேமைத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இப்போது துவங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கமல்ஹாசன் வாழ்த்து

முதல்நாளான அறிமுகநாளில் கமல்ஹாசன் அனைவரையும் உள்ளே அனுப்பி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார். இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகளை வைத்து சோதிப்பார். வழக்கமான நடைமுறை இதுவாக இருந்தாலும் இப்போது வீட்டில் நுழைந்தவுடனேயே போட்டி தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7ல் பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா எஸ் அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

இரண்டாவது வீடு

கடைசியாக வந்த விஜய் வர்மாவுக்கு இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவி கிடைத்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜய் வர்மாவை அதிகம் கவராத 6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பிக்பாஸின் இந்த அதிரடி முடிவு முதல்நாளே பலரையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. என்றாலும் அவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து மற்ற விதிகளும் போடப்படும் என்று கூறப்படுகிறது.

எலிமினேசன் யார்?

பவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா விஜயகுமார் ஆகியோர்தான் இந்த வார எலிமினேசன் கேட்டகரிக்கு நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் உங்களுக்கு பிடித்தவர்களை காப்பாற்ற ஓட்டு போடக் கேட்டுக்கொண்டுள்ளார் பிக்பாஸ். இந்நிலையில் இப்போதைய நிலவரப்படி இரண்டு பேர் மிகக்குறைவான வாக்குகளைப் பெற்று எலிமினேட் ஆகும் நிலையில் இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் யுகேந்திரன் மற்றொருவர் அனன்யா. இவர்கள் இருவருக்கும் ஓட்டுகள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. அதிலும் அனன்யாவுக்கு மிகவும் குறைவான ஓட்டுக்களே கிடைத்துள்ளன.


யாரிந்த சுமால் பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸாக பேசுபவர் பெயர் சாஷோ. இவரைப் பற்றிய தகவல்கள் பல ஆண்டுகளாக பொத்தி பொத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டுதான் தெரியவந்தது. இந்நிலையில் இப்போது சுமால் பாஸ் ஒருவர் வந்திருக்கிறார். அவர் சென்னையைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர்தானாம்.

தியேட்டர் ஆர்டிஸ்ட், கூத்து பட்டறையில் பயிற்சி பெற்றவர். சினிமாவில் முயற்சி செய்து வந்தவருக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!