Bigg Boss Season 6 இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் பிரபலம் இவர் தானாம்
Bigg Boss 6 Sheriina -ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
போட்டியாளர்களிடையே டாஸ்க் சமயத்தில் கடுமையான போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையிலும் தகராறு செய்வது, டாஸ்க் சமயத்தில் சீன் போடுவது என பரபரப்பாக சென்று கொண்டிருக்கறது.
இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஓட்டின் அடிப்படையில் தகுதி இல்லாத போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.
அந்த வகையில் இதுவரை வெளியேறிய நபர்கள் அனைவருமே மக்கள் முடிவெடுத்த போட்டியாளர்களாக இருந்திருக்கின்றனர். அதனால் இந்த வாரமும் மக்களின் கணிப்பின்படியே எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதன் அடிப்படையில் தற்போது கிடைத்துள்ள தகவல் அடிப்படையில், இந்த வாரம் செரினா பிக் பாஸ் வீட்டை விட்டு மிகக் குறைந்த ஆதரவைபெற்று வெளியேறுகிறார்.
இந்த வார நாமினேஷனில் விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா, செரீனா ஆகியோர் இடம் பிடித்தனர். அதில் விக்ரமனுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதனால் அவருக்கான ஓட்டுக்களும் எக்கச்சக்கமாக கிடைத்திருக்கிறது. இதுவரை அவருக்கு 37% ஆதரவு கிடைத்துள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக அசீமுக்கு (34%) அதிக ஓட்டுக்கள் கிடைத்திருக்கிறது. இவருடைய நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக ரசிகர்களை கொதிப்படைய செய்தது. கமலும் அவரை வெச்சு செய்தார். இதனால் இந்த வாரம் அசீமின் நடவடிக்கையில் சற்று மாற்றம் தெரிந்துள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக கதிரவனுக்கு 17% ஓட்டுகள் கிடைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் இவர் எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாகவே வலம் வருகிறார்.
இவரை தொடர்ந்து பார்ப்பவர்களை மட்டுமல்ல, போட்டியாளர்களையும் கடுப்பேற்றும் வகையில் நடந்து கொள்ளும் ஆயிஷாவுக்கு குறைவான ஓட்டுகள் கிடைத்திருக்கிறது.
ஆனால் கடந்த வாரம் போட்டியின் போது கீழே விழுந்து அடிபட்டதால் காயம் அடைந்து உயிருக்கு போராடுவது போல் சீன் போட்ட செரினாவுக்கு மிக மிக குறைவான ஓட்டுகள் கிடைத்துள்ளது. ரசிகர்கள் ஆஸ்கர் ரேஞ்சுக்கு நடிக்கிறார் என்று கூறி வந்தனர். அதனாலேயே அவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டனர். அதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு செரினா வெளியேறுகிறார்.
மக்களின் ஆசைப்படி இந்த ஆஸ்கர் நாயகி தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu