சூரி நடித்து வரும் விடுதலை படத்திற்கு எப்போ தான் விடுதலை கிடைக்குமோ?

அசுரன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் விடுதலை படத்திற்கு எப்போதான் விடுதலை கிடைக்குமோ?
எப்போதும் நாவல்களை படமாக்குவதில் ஆர்வம் கொண்ட இயக்குநர் வெற்றிமாறன் இம்முறை சிறுகதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி, 1992-ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக்கொண்டே விடுதலை எடுக்கப்படுது.
இதில் போலீஸாக சூரியும், போராளியாக விஜய்சேதுபதியும் நடிக்கிறார்கள். முதலில் விஜய்சேதுபதிக்கு பதில் பாரதிராஜா நடிக்கயிருந்தார். அவரை வைச்சுதான் ஷூட்டிங்கும் தொடங்கிச்சு. ஆனால், சத்தியமங்கலம் காட்டுக்குள் குளிர் அதிகம் இருந்ததால் பாரதிராஜாவின் உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் பாரதிராஜா படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி படத்தில் இணைஞ்சார்.
ஒரு கட்டத்தில் விரக்தியாலோ என்னவோ இந்த படத்தின் ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு -ன்னு சொல்லி பூசணிக்காய் எல்லாம் உடைத்தனர். ஆனால் இன்னும் நாட்கள் இழுத்துக் கொண்டே போகிறது .நெசம் என்னான்னா விஜய் சேதுபதியின் கால்ஷீட் இல்லாததால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. கடைசியாக இன்னும் 40 நாட்கள் மட்டுமே சூட்டிங் மீதி இருக்குது-ன்னு சொல்லியே ஒரு வருடம் ஓடிவிட்டது.
தற்போது விஜய் சேதுபதி மீண்டும் கால்ஷீட் கொடுக்கவே, வண்டலூர் அருகே பிரம்மாண்ட ரயில்வே செட் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன் படி ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது
அதே சமயம் அதற்காக நடிகர் விஜய் சேதுபதியிடம் 30 நாட்கள் கால்ஷீட் வாங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மீதம் 40 நாட்களே உள்ள நிலையில் விஜய் சேதுபதியிடம் மட்டும் 30 நாட்கள் கால்ஷீட் வாங்கப்பட்டுள்ளதால் படத்தில் நாயகன் சூரியா? இல்லை விஜய் சேதுபதியா? என ரசிகர்கள் கேட்டு வருவதுடன் சூரி நீங்க காமெடியன் ஆகவே கலக்கி இருக்கலாம் என்று ரசிகர்கள் அட்வைஸ் பண்ணி வாராய்ங்க
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu