தமிழ் திரையுலகில் டாப் காமெடி ஆக்டரா வலம் வந்த வடிவேலுக்கு என்னாச்சு

தமிழ் திரையுலகில் டாப் காமெடி ஆக்டரா வலம் வந்த வடிவேலுக்கு என்னாச்சு?
Vadivelu 2.50 Comedy-தமிழ் திரையுலகில் டாப் காமெடி ஆக்டரா வலம் வந்த வடிவேலு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடை காரணமாக, சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். போன வருசம் லைக்கா தலையிட்டு நடத்திய சமரச பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டு தடையும் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதையடுத்து சினிமாவில் இரண்டாவது ரவுண்டை வடிவேலு தொடங்கிட்டதா சேதி எல்லாம் வந்துச்சு.
தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடிச்சு வாரார். இப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்குதாம். அதனைத்தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்க ஒப்பந்தமானதா சேதி வந்துச்சு இந்த படத்தில் வடிவேலு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூட தகவல் வெளியானது
டைரக்டர் கவுதம் மேனனும் வடிவேலுவை வைத்து முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை இயக்க பேசி வருவதாக தெரிவிச்சிருந்தா. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திலும் வடிவேலுவை, நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதா சேதி வந்துச்சு ஆனா அதுக்கப்புறம் வடிவேலு குறிச்ச ஒரு சேதியும் ஏன் வரலை-ன்னு விசாரிச்சா 'என்னத்தைச் சொல்றது?.. வேண்டாங்க விடுங்க" அப்படீன்னு மென்னு முழுங்கறாய்ங்க
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu