கதாநாயகிகளுக்கு என்னாச்சு.. சிகிச்சையில் த்ரிஷா, சமந்தா, பூஜா ஹெக்டே

கதாநாயகிகளுக்கு என்னாச்சு.. சிகிச்சையில் த்ரிஷா, சமந்தா, பூஜா ஹெக்டே
X
what happened to pooja hegde - முன்னணி நடிகைகளான த்ரிஷா, சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் சிகிச்சையில் இருப்பது திரையுலகிலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

what happened to pooja hegde - முன்னணி நடிகைகளான த்ரிஷா, சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் சிகிச்சையில் இருப்பது திரையுலகிலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா தற்போது தீவிர, உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இவர் நடிக்கும் இரண்டு படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. சமந்தா கடந்த சனிக்கிழமையன்று தனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை கண்டறியப்பட்டதாக அறிவித்தார். ஒரு நாற்காலியில் அமர்ந்து, கைகளால் இதய அடையாளத்தை காட்டும் படத்தை நடிகை வெளியிட்டார்.

samantha health condition

ஏற்கனவே இவருக்கு தோல் சம்பந்தமான ஒரு நோய் இருந்து வந்தது. அதனை சரிப்படுத்த சில வருடம் இடைவெளி எடுத்து அதை சரி செய்து பின்னர் நடிக்க வந்தார். இப்பொழுது நன்றாக சென்று கொண்டு இருக்கும் சமந்தா வாழ்வில் மறுபடியும் அந்த நோய் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அந்த நோயின் பெயர் 'மயோ சைட்டிஷ்' என்று நோய் தனக்கு வந்துள்ளதாக அவரே புகைப்படத்தை வைத்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இந்த மயோ சைட்டிஷ் நோய்க்கு தடுப்பு மருந்துகள் மட்டுமே உள்ளதாகவும், அதனை அழிக்கும் மருந்துகள் ஏதும் இல்லை எனவும், உணவு முறைகள் மூலமாகவே இதை தற்காலிகமாக தடுத்து முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நோயின் அறிகுறிகள் தசை வீக்கம், உடல் சோர்வு, உடல் மெலிந்து காணப்படுதல், உணவு உட்கொள்ளாத படி தொண்டை வலி இன்னும் சில அறிகுறிகள் இருக்குமாம். தைரியத்துடன் சில விஷயங்களை செய்து வந்தால் நல்ல முறையில் இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பின் போது பிரபல நடிகை பூஜா ஹெக்டேவுக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இவர் இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாளி தண்ணீரில் கால் வைத்தபடி உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் தினமும் இப்படித்தான் காலை விடிகிறது எனவும், படிப்படியாகத்தான் குணமாகும் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

trisha health issues

இவர்கள் இருவரைத் தொடர்ந்து, நடிகை த்ரிஷாவும் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இதுகுறித்து சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறார். இவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு 3 முன்னணி கதாநாயகிகளும் சிகிச்சை பெற்று வருவதால் அவர்கள் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு தாமதமாகி வருவது மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!