சின்னத்திரை சீரியல்களுக்கு போட்டியாக வந்து விட்டது வெப் சீரியல்

சின்னத்திரை சீரியல்களுக்கு போட்டியாக வெப் சீரியல் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சின்னத்திரை சீரியல்களுக்கு போட்டியாக வந்து விட்டது வெப் சீரியல்
X

வதந்தி வெப் சீரியல் தொடரில் ஒரு காட்சி.

pandian stores actor kumaran acting in thangarajan vadhanthi web series, Pandian Stores fame Kumaran Thangarajanதமிழ் திரை உலகின் மூத்த முன்னோடி எது என்று கேட்டால் கூத்துப்பட்டறை என்று தான் சொல்வார்கள் திரைக் கலைஞர்கள். ஆம் கிராமங்களிலும் புறநகர் பகுதிகளிலும் கூத்து என்ற பெயரில் நடந்த காட்சிகள் தான் பின்னர் நாடகமாக மாறின. கூத்துகள் நாடகமாக அரங்கேறிய பின்னர் கூத்துப்பட்டறை களை இழக்கத் தொடங்கியது.

pandian stores actor kumaran acting in thangarajan vadhanthi web series, Pandian Stores fame Kumaran Thangarajanநாடகங்கள் மக்களுக்கு அறிவுள்ள கருத்துக்களை நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருந்த வேளையில் சினிமா அதனுள் தனது மூக்கை நுழைத்தது. ஊமை படம் ,பேசும் படம் என சினிமாவின் வளர்ச்சி ஓஹோ என்று வந்த பின்னர் சினிமா இல்லை என்றால் உலகமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அது பிரம்மாண்டமாக வளர்ந்தது.

pandian stores actor kumaran acting in thangarajan vadhanthi web series, Pandian Stores fame Kumaran Thangarajanசினிமாவின் வளர்ச்சி இப்படி உச்ச கட்டத்தில் இருந்தபோது தொலைக்காட்சி எனப்படும் சின்னத்திரை நாடகங்கள் நைசாக வந்ததன. தொலைக்காட்சி சின்னத்திரை நாடகங்கள், சீரியல்களுக்கு என்று எப்போதும் ஒரு தனி மரியாதை ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் சீரியல் களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் தான் சீரியலுக்கு அடிமை என்று கூறலாம். காரணம் வீட்டில் அவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு சாதனமாக திகழ்ந்து வருகிறது. இப்படி சின்னத்திரை சீரியலுக்கு போட்டியாக வந்துவிட்டது வெப் சீரியல் என்ற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி.

அந்த வகையில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' என்பதாகும்.

pandian stores actor kumaran acting in thangarajan vadhanthi web series, Pandian Stores fame Kumaran Thangarajanஇதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் இயக்குனர் மற்றும் நடிகர் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தொடரான 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

pandian stores actor kumaran acting in thangarajan vadhanthi web series, Pandian Stores fame Kumaran Thangarajanஅமேசான் ப்ரைம் வீடியோவின் 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகி. வெகு பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. இந்த தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல், 30க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளுடன், 240 பிராந்தியங்களிலும் வெளியாகிறது.

pandian stores actor kumaran acting in thangarajan vadhanthi web series, Pandian Stores fame Kumaran Thangarajanஇந்த வெப் சீரிஸில் நடித்துள்ள குமரன் தங்கராஜன், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குமரன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " எனது ரசிகர்கள் & குடும்பத்திற்கு நன்றி! "புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பயணத்தின் போது கையை பிடித்துக் கொண்டு நடக்க எப்பொழுதும் சில கைகள் தேவை. எனக்கு இது தேவை என்று நான் கூறவில்லை, நீங்கள் அனைவரும் இதை எப்போதும் செய்து வருகிறீர்கள். குறிப்பாக வதந்திக்காக, என்றென்றும் செய்வீர்கள் என்று கூறுகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. .." உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்" என குமரன் அதில் பதிவிட்டுள்ளார்.

Updated On: 25 Nov 2022 8:06 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  சென்னை புயல் பாதிப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு
 2. கல்வி
  Thanchai Periya Kovil-அதிசயத்தின் அதிசயம், தஞ்சை பெரிய கோவில்..!
 3. தொழில்நுட்பம்
  Governments Spying on Apple & Google Users-ஆப்பிள்,கூகுள் தரவுகள்...
 4. தமிழ்நாடு
  கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
 5. இந்தியா
  Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
 6. தமிழ்நாடு
  ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 7. தமிழ்நாடு
  தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
 8. இந்தியா
  Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
 9. திருநெல்வேலி
  திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
 10. குமாரபாளையம்
  சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!