விவாகரத்தா? பொங்கி எழுந்த விஷ்ணு விஷால்!

விவாகரத்தா? பொங்கி எழுந்த விஷ்ணு விஷால்!
X
கடந்த ஜனவரி 22ம் தேதி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் விஷ்ணு. ஆனால் அதன்பிறகு பிப்ரவரி 18ம் தேதி நீங்களே உங்களுக்காக போராட வேண்டும் வேறு யாரும் வரமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதைத் தான் ஊடகங்கள் அவருக்கு விவாகரத்து என்று கூறி செய்தி பரப்பி விட்டன.

தனது இரண்டாவது மனைவியையும் விஷ்ணு விஷால் பிரிவதாகவும் அதைத் தான் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாகவும் நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். இதனையடுத்து விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியும் பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜூவாலா கட்டாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு. நான் சொன்னது வேற நீங்க புரிஞ்சிக்கிட்டது வேற என பொங்கி எழுந்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்திருந்தாலும் இன்று நேற்று, நாளை, மற்றும் ராட்சசன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் பட்டியலில் இடம்பிடித்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கட்டா குஸ்தி. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் விஷ்ணு. ஆனால் படம் பெரிய அளவில் வசூலைப் பெறவில்லை. ஓரளவுக்கு நல்ல படமாக அமைந்ததன் விளைவாக ஹிட்டானது.

விஷ்ணு விஷாலுக்கு நளினி நடராஜன் எனும் மனைவி இருந்தார். ஆனால் இவர்களுக்குள் ஒத்து வராதாததை அடுத்து விவாகரத்து செய்துவிட்டனர். பின் சில ஆண்டுகளுக்கு பிறகு தனது நண்பராக இருந்த ஜூவாலாவை காதலித்து திருமணம் செய்தார் விஷ்ணு.

அவ்வப்போது இருவரது சமூக வலைத்தளங்களிலும் ஏதாவது புகைப்படங்களைப் போட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் கடந்த சில மாதங்களாக எதையும் அப்டேட் செய்யாமல் இருப்பதால் ரசிகர்கள் மேலும் சந்தேகிக்கின்றனர். உண்மையில் இருவருக்குள்ளும் ஏதாவது பிரச்னையா அதனால்தான் இருவரும் புகைப்படங்களை இடவில்லையா என கேட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி 22ம் தேதி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் விஷ்ணு. ஆனால் அதன்பிறகு பிப்ரவரி 18ம் தேதி நீங்களே உங்களுக்காக போராட வேண்டும் வேறு யாரும் வரமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதைத் தான் ஊடகங்கள் அவருக்கு விவாகரத்து என்று கூறி செய்தி பரப்பி விட்டன. ஆனால் உண்மையை அறியாமல் இப்படி செய்திருக்கக்கூடாது என கோபப்படுகிறார் விஷ்ணு விஷால்

தான் சினிமா பற்றி கூறிய ஒன்றை என் இல்லற வாழ்க்கைப் பற்றிய கருத்தாக நினைத்து செய்தி வெளியிட்டிருக்ககூடாது. ஒருவருக்கு நாம் கொடுக்கும் பெரிய பரிசு நம்பிக்கைதான். ஆனால் தோற்றுவிட்டால் நம்மை குறைசொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு கடினத் தன்மை தேவையில்லை. இதைத்தான் நான் கூறியிருந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!