விஜய்க்கு வில்லனாக விஷால்.. தளபதி 67 படத்தின் அப்டேட்

விஜய்க்கு வில்லனாக விஷால்.. தளபதி 67 படத்தின் அப்டேட்
X

பைல் படம்.

Vijay Thalapathy Latest Movie - தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Thalapathy Latest Movie -தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாகவும், ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடித்த 'வாரிசு' திரைப்படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் அன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கிடையில், மாஸ் ஹீரோவான விஜய் தனது அடுத்த 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்புக்கு இந்த ஆண்டு இறுதியில் செல்வார் எனக் கூறப்படுகிறது. தளபதி 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதிகாரபூர்வ அப்டேட் எதுவும் வரவில்லை என்றாலும், 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கதாநாயகியாக நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா கிருஷ்ணன் போன்றவர்களின் பெயர்கள் உலாவருகிறது.

'தளபதி 67' படத்தில் பல வில்லன்கள் இருப்பார்கள் என்றும், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. முதலில் மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரனை முதன்மை வில்லனாக நடிக்க அணுகினர். ஆனால் பிரபாஸின் 'சலார்', 'எல்2: எம்புரான்' 'டைசன்' மற்றும் 'செல்ஃபி' ஆகிய படங்களில் பிஸியாக இருந்து வருகிறார் என்பதாலும், அவரது நீண்ட கமிட்மென்ட்டாலும் அவரால் ஏற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

vijay 67 villain

'தளபதி 67' படத்தில் நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக பலத்த செய்திகள் வெளியாகின. எல்லா காலத்திலும் பிடித்த காதல் படமான 'பிரேமம்' ஹீரோ தற்போது ராம் இயக்கத்தில் அஞ்சலி மற்றும் சூரி நடிக்கும் மற்றொரு தமிழ் திரைப்படமான 'ஏழு காதல் ஏழு மலை' படத்தில் நடித்து வருகிறார்.

பிரேமம் படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நிவின் பாலி, விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளார். தமிழில் சாமா படத்தில் நடித்த நிவின் பாலி மற்றும் அதன் பிறகு அவரது படங்கள் சரியாக போகவில்லை. ஆனால் மலையாள திரையுலகில் இவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நேரத்தில், தற்போது விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புக் செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்படிப்பு டிசம்பர் 5ம் தேதி கேரளாவின் மூணாறில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜும் நடிகர் விஷாலின் படப்பிடிப்பின் செட்களில் காணப்பட்டார். ஆனால் தளபதி 67 இல் விஷால் ஒரு வில்லன் பாத்திரத்திற்காக அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரத்திற்காக அணுகப்பட்டாரா என்பது தெரியவில்லை .



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!