வைரலாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட போஸ்டர்..!

வைரலாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட போஸ்டர்..!
X

 'நட்சத்திரம் நகர்கிறது' பட போஸ்டர்.

'சார்பட்டா பரம்பரை'க்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'நட்சத்திரம் நகர்கிறது' படபோஸ்டர் வைரலாகி வருகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்திருப்பவர். அதேபோல், படத் தயாரிப்பிலும். அண்மையில், இவரது இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் வெளியான 'சார்ப்பட்டா பரம்பரை' படம் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற நிலையில் அடுத்து அவர், 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் முழுக்க முழுக்க காதல் தொடர்பான கதை என கூறப்படுகிறது. இந்தநிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து இருக்கிறது. 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் ஜெயராம் மகன் காளிதாஸ், சார்பட்டா ஹீரோயின் துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தநிலையில், 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!