சிவகார்த்திகேயனின் வில்லன் மிஷ்கின்..?

சிவகார்த்திகேயனின் வில்லன் மிஷ்கின்..?
X

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்கினர் மிஸ்கின்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லன் கேரக்டரில் நடிக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் முழுக்க முழுக்க எல்லா தொழில்களுமே முடங்கிப்போயின. குறிப்பாக, முதல் அலையின்போது, கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. அது இரண்டாவது அலையின்போதும் தொடர்ந்தது. திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததோடு படப்பிடிப்புகளும் தடை செய்யப்பட்டன. மெல்லமெல்ல மீண்டபிறகு, கட்டுப்பாடுகள் தளர்ந்து மீண்டும் எல்லா தொழில்களும் சுறுசுறுப்பாக இயங்கியதைத் தொடர்ந்து, புதிய புதிய திரைப்படங்களும் தியேட்டர்களில் வெளியிட தொடங்கின.

இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் 'டாக்டர்' மற்றும் அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் 'டான்' என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களும் தற்போது 100 கோடி வசூலை கடந்து நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.

இதனைத்தொடர்ந்து, கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் தன் இருப்பிடத்தை இன்னும் வலுவாக்கிக்கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன் என்கிறார்கள். இந்த வேகத்திலேயே அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த தொடங்கியவர், அடுத்து, தனது 21வது படமாக அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் புயலென நடந்து வருகிறது.

இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 22வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கப் போகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு, 'மண்டேலா' படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வினுடன் அடுத்த படத்தில் இணைகிறார். இந்தப் படத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிப்பதற்காக இயக்குநர் மிஷ்கினிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தமிழ்ச்சினிமா வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்