பிக்பாஸ் வீட்டில் துடிதுடித்து விழுந்த விக்ரமன்

பிக்பாஸ் வீட்டில் துடிதுடித்து விழுந்த விக்ரமன்
X

பிக்பாஸ் வீட்டில் விழுந்து கிடக்கும் விக்ரமன்.

bigg boss tamil 6 today promo, Bigg Boss Tamil Season 6 பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் துடிதுடித்து விழுந்த காட்சியை பார்த்த பின்னரும் கதறி ஆள் இல்லாமல் போனது.

bigg boss tamil 6 today promo, Bigg Boss Tamil Season 6விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதியில் இருந்து தமிழ் பிக்பாஸ் ஆறாவது சீசன் பொழுது போக்கு நிகழ்ச்சி தொடங்கி தினமும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் 21 பேர் உள்ளே குடி வந்தனர். இவர்களில் பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, சாந்தி, அசல்கோலார் ஆகியோர் வெளியேற்றப்பட்டு விட்டனர். மீதம் உள்ளே இருப்பவர்களுக்கு தினமும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பொம்மை டாஸ்க்கின்போது போட்டியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர். இதில் தனலட்சுமி தன்னை தாக்கி கீழே தள்ளி விட்டதாக ஆயிஷா கூறினார். இந்த பிரச்சினை இன்னும் முடிவிற்கு வரவில்லை.


bigg boss tamil 6 today promo, Bigg Boss Tamil Season 6இந்த நிலையில் பி.பி. டேலண்ட்ஷோ குறித்த ப்ரோமா ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஜனனி டான்ஸ் ஆடுகிறார். அமுதவாணனோ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பட வசனங்களை பேசுகிறார். விக்ரமன் கீழே விழுந்து கிடக்கிறார். அவர் விழுந்து கிடப்பதை பார்த்த பின்னரும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு அனுதாபம் ஏற்படவில்லை.

bigg boss tamil 6 today promo, Bigg Boss Tamil Season 6ப்ரமோ வீடியோவை பார்த்த ரசிகள் இதுபற்றி கூறுகையில் ப்ரமோ எல்லாம் நன்றாக தான் இருக்கு.ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன் அளவிற்கு இப்போது சுவாரஷ்யம் இல்லை. இந்த வார போட்டிகள் மிகவும் போரடிக்கிறது. ஏதாவது ஒரு டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை விளையாட விடவேண்டும்.

bigg boss tamil 6 today promo, Bigg Boss Tamil Season 6அசல் கோலார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் நிவாஷினி தற்போது ரொம்ப ரிலா௧்ஸ் ஆக இருப்பது நன்றாகவே தெரிகிறது. இந்த வாரம் ஆயிஷாவையும் வெளியேற்றினால் நன்றாக இருக்கும். பிக்பாஸ் வீட்டிற்குள் ராம் என ஒருவர் வந்தாரே அவர் என்ன ஆனார்? என்ன செய்கிறார் என பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலர் ஆக பார்த்து வரும் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

bigg boss tamil 6 today promo, Bigg Boss Tamil Season 6பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டரை ரசிகர்கள் மிக்சர் மாமா என அழைக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு பிரச்சினைகள் நடந்தாலும் ராபர்ட் மாஸ்டர் மட்டும் எதுவும் செய்யாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்கிறாரே என விமர்சனம் செய்கிறார்கள். அவர் எந்த வேலையும் செய்யமாட்டாரா? என்ற ஒரு கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

Tags

Next Story