நடிகர் சியான் விக்ரமுக்கு கொரோனா தொற்று

நடிகர் சியான் விக்ரமுக்கு கொரோனா தொற்று
X

விக்ரம்

சினிமா நடிகர் சியான் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. அதே நேரம், கொரோனா தொற்றின் உருமாறிய வைரஸான ஒமிக்ரான் தாக்கம் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் திரைத்துறையினர் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அண்மையில், நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த, தனியார் டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி திரும்பிய நிலையில், அர்ஜுனுக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், தற்போது நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு, கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு நடந்த பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், எனவே, வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்