கமல் ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம்

கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம்
X

கமல் ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படப்பிடிப்பு குழு

"விக்ரம்" விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளிவந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி குறித்த காட்சிகளின் டெஸ்ட் படப்பிடிப்பு நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்ட வதந்திக்கு இந்த தகவல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகிய நால்வரும் வில்லன்களாக நடிக்க உள்ளனர் என்பதால் வேற லெவலில் இந்த படம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை, இயக்கம் - லோகேஷ் கனகராஜ்

வசனம் - ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ்

ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன்

இசை - அனிருத்

படத்தொகுப்பு - பிலோமின் ராஜ்

கலை இயக்குனர் - N.சதீஸ் குமார்

சண்டை பயிற்சியாளர் - அன்பறிவு

நிர்வாக தயாரிப்பாளர் - S. டிஸ்னி

தயாரிப்பாளர் - கமல் ஹாசன் & R.மகேந்திரன்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!