நூறாண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் சாதனையில் 'விக்ரம்-2'
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் வெளியான 'விக்ரம்-2' படம் நூறாண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் வசூலில் புதிய சரித்திர சாதனை படைத்துள்ளது. படம் வெளியானபோது, திரை ரசிகர்களிடமும் திரையுலகப் பிரமுகர்களிடமும் நல்ல வரவேற்பையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.
அதோடு, நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படம் மாபெரும் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகமடைந்தார் கமல் ஹாசன். மேலும், 'விக்ரம்-2' படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி என்கிற தித்திப்புச் செய்தியையும் அள்ளித் தந்தது.
இந்த உற்சாகத்தோடு படத்தின் அடுத்த பாகத் தயாரிப்புப் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளன என்கிறார்கள் படக்குழுவினர். இந்தநிலையில் அண்மையில், தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் இதுதொடர்பாக கோவையில் நடைபெற்ற விக்ரம் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது,
''கமலின் 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை இந்தப் படம் பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவில் தற்போது 100 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூலை அள்ளிக் குவித்த நம்பர் ஒன் திரைப்படம் 'விக்ரம்' தான்'' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu