பீஸ்ட் திரைப்படம் அதிகாலை பெரும்ஆரவாரத்துக்கு மத்தியில் வெளியாகிடுச்சு

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதிகாலை பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் வெளியாகிடுச்சு.
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலையிலேயே குவிஞ்சுட்டாய்ங்க. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரைப்படத்தை பார்க்க குவிந்ததோடு அங்கு ஒலித்த பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர்.
இன்னிக்கு அதிகாலை காட்சிக்கு திரையரங்கிற்கு முன்பு குவிந்த பல பேரிடம் படத்தை பார்க்க உரிய டிக்கெட் இல்லை என்றாலும் காட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்ட உடன் திரையரங்கில் கூட்டம் அத்துமீறி நுழைஞ்சதால் திரையரங்க பணியாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிட்டாய்ங்க. உரிய டிக்கெட் இல்லை என்றாலும் திரையரங்கில் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் தானாகவே இருக்கைகளில் சென்று அமர என்ன செய்வது என்று தெரியாமல் திரையரங்க உரிமையாளர்கள் விழி பிதுங்கி நின்னுட்டாய்ங்க.
ஒருகட்டத்தில் உரிய டிக்கெட் உடன் வந்த ரசிகர்கள் திரையரங்கிற்கு இடமில்லாமல் தவிக்க பலரும் திரைப்படத்தை திரையரங்கிற்குள் நின்றுகொண்டு பார்க்கும் நிலைதான்.
இன்னும் சில ரசிகர்கள் திரையரங்கில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த எல்இடி (LED) திரைகளை உடைத்து ஆர்ப்பரிக்க தொடங்கினர். அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்கலாம் என்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து அதற்கான டிக்கெட் விலை பல மடங்கு ஏற்றிவைக்கும் திரை அரங்குகள் இதுபோன்ற சவால்களையும் எதிர் கொள்ளும் நிலை அண்மைக் காலமாக அதிகரித்து வருது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu