விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்  தனது பிறந்த நாளை கொண்டாடினார்
X
விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்

விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்

என்னை அரசியலுக்கு இழுக்கவேண்டாம். முழுநேர நடிகராக இருந்து அப்பாவின் கலை உலக வாரிசாக மட்டுமே இருக்கவிரும்புகிறேன்' என்கிறார் கேப்டன் விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன்.


தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இன்று தனது 29 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் தந்தை விஜயகாந்த், தாய் பிரேமலதா மற்றும் கட்சிப் பிரமுகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார் சண்முகப்பாண்டியன். கொண்டாட்டத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்று தெரிவித்தார்.

எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே இருக்கிறவர்கள் போதும். எனக்கு அரசியல் ஆசை இல்லை. அப்பாவின் சினிமா புகழைக் காப்பாற்ற ஒரு நல்ல நடிகனாகவே விரும்புகிறேன்" என்று நிருபர்களிடம் கூறினார் சண்முகப் பாண்டியன்.

அப்பாவின் பெயரைக் காப்பாற்ற சினிமாவில் தொடர்ந்து நடிக்க விரும்பும் சண்முகப் பாண்டியன் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்பது வேதனையுடன் குறிப்பிடத்தக்கது. 4 ஆண்டுகளுக்கு முன் 'சகாப்தம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன சண்முக பாண்டியன் அடுத்து 'மதுர வீரன்' என்ற படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். மூன்றாவதாக பூஜை போடப்பட்ட 'தமிழன் என்று சொல்' படம் அப்படியே கிடப்பில் இருக்கிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா