யூடியூப்பில் டிரெண்ட் அடித்த அறந்தாங்கி நிஷாவின் ஹோம் டூர்

அறந்தாங்கி நிஷா (பைல் படம்).
Aranthangi Nisha House-விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இப்போது சினிமாவிலும் நுழைந்து கலக்கும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் அறந்தாங்கி நிஷா, பெண் காமெடியன்கள் லிஸ்டில் மிகவும் விரைவிலேயே இணைந்தவர்.
அந்த அளவிற்கு காமெடி செய்வதில் இவர் அசத்தியுள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியால் கிடைத்த பிரபலம் அவருக்கு நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார். இப்போது சின்னத்திரை பிரபலங்கள் அனைவரையும் போல இவரும் கருப்பு ரோஜா என்ற யூடியூப் சேனல் ஒன்றை திறந்து அதில் பல வீடியோக்கள் பதிவு செய்து வருகிறார். அப்படி அவர் திருச்சியில் தான் கட்டிவரும் புதிய வீட்டின் வீடியோவை வெளியிட அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu