விஜய் போட்ட உத்தரவு.. தொடங்குது அரசியல் அதிரடி..! தடபுடலென ரெடியாகும் கட்சி...!

விஜய் போட்ட உத்தரவு.. தொடங்குது அரசியல் அதிரடி..! தடபுடலென ரெடியாகும் கட்சி...!
X
விஜய் போட்ட உத்தரவு.. தொடங்குது அரசியல் அதிரடி..! தடபுடலென ரெடியாகும் கட்சி...!

தான் தொடங்கியுள்ள அரசியல் கட்சி குறித்த முக்கிய முடிவு ஒன்றை இரவோடு இரவாக எடுத்து ரசிகர்களாகிய தனது தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் விஜய். இந்த தகவல்தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான விஜய், தனது மக்கள் இயக்கத்தை திடீரென கட்சியாக மாற்றி அறிவித்தார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த இந்த இயக்கத்தில் தற்போது தமிழக வெற்றி கழகமாக அறிவித்துள்ளார் விஜய். அவரது முழுநேர அரசியல் பயணத்தை விரைவில் துவங்கவுள்ளதை அறிவித்த விஜய், அதற்கு முன் செய்து முடிக்கவேண்டிய பணிகள் குறித்து பட்டியலிட்டு ஒவ்வொன்றாக முடித்து டிக் செய்து வருகிறாராம்.

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் ஜோடியாக சினேகா, மீனாட்சி இருவரும் நடித்து வருகின்றனர். இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்துவிட்டு அடுத்த படத்துக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கின் அடிப்படையில் அடுத்த படத்தை முடித்துக் கொண்டு வரும் நவம்பர் 2024ல் தனது கட்சி நிலைப்பாடு குறித்தும் மாநாடு குறித்தும் தகவல்களை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், அவரது கட்சியின் மாவட்ட செயலாளர்களாக விஜய் ரசிகர் மன்றங்களில் பொறுப்புகளில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர்களாக இருந்தவர்களையே நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவை ஒரு நாள் இரவிலேயே எடுத்து அதனை உடனடியாக அனைத்து மாவட்ட இயக்கங்களுக்கும் தெரிவித்து அடுத்தடுத்து அனைத்து நிர்வாகிகளையும் பதவி ஏற்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனராம் தமிழக வெற்றி கழகத்தினர்.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை டிக் செய்வதற்கு முன்னதாக விஜய் நினைத்திருந்த பெயர் வேறொன்றாம். தமிழக மக்கள் கட்சி என்றே அவர் நினைத்திருந்தாராம். ஆனால் இந்த பெயர் ஆங்கிலத்தில் TMK என்று வரும்போது, அது கிராமப்புறங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உச்சரிப்பில் ஏற்கனவே தமாகா என்ற கட்சியை நினைவுபடுத்துவதாக அமைகிறது. இதனால் அந்த பெயரை மாற்றிவிட்டு தற்போதைய தமிழக வெற்றி கழகம் எனும் பெயரை வைத்துவிட்டனராம்.

இதுவரை விஜய் ரசிகர் மன்றத்தினராக இருந்த மக்கள் இயக்கத்தினர் மாவட்ட, வட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளதால், தேர்தல் வேலைகளை எதிர்பார்த்ததை விட வேகமாக செய்து முடிக்க முடியும் என விஜய் நம்புகிறாராம். அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் நம்மை அசரடிக்க காத்திருக்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்