நடிகர் விஜய் மகன் ஜேசன் பெயரில், போலி டிவிட்டர் - ஏமாந்த ரசிகர்கள்

நடிகர் விஜய் மகன் ஜேசன் பெயரில், போலி டிவிட்டர் - ஏமாந்த ரசிகர்கள்
X

 vijay thalapathy son -  நடிகர் விஜய் மகன் ஜேசன் பெயரில், போலியான டிவிட்டர் கணக்கு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஜேசன், எந்தவொரு சமூக வலைதளங்களையும் பயன்படுத்துவது இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. 

Vijay Thalapathy Son - நடிகர் விஜய் மகன் ஜேசன் பெயரில், போலியாக டிவிட்டர் இருப்பது தெரிய வந்தது. ஜேசன், எந்த ஒரு சமூகவலைதள பக்கங்களிலும் இல்லை என, விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Vijay Thalapathy Son - வாரிசு படத்தின் ஷூட்டிங் காட்சிகளை 'லீக்' செய்ய வேண்டாம் என்று, விஜய்யின் மகன் ஜேசனின் பெயரில் ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், எந்தவொரு சமூக வலைதளங்களிலும் இல்லையென விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜேசன் பெயரில் பதிவுகள் வெளிவந்த நிலையில், இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது.

விஜய் தற்போது 'வாரிசு' படத்தின் ஷூட்டிங்கில் 'பிஸி'யாக இருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு, இசையமைத்துள்ளார்.


தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்க, தில் ராஜு படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில், உச்சகட்டமாக விஜய்யும், ராஷ்மிகாவும் சிவப்பு உடையில் நடனமாடும் 30 வினாடி காட்சி ஒன்று, லேட்டஸ்டாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து ஷூட்டிங் காட்சிகள் 'லீக்' ஆனதால் விஜய் ரசிகர்கள், படக்குழுவினர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், ஷூட்டிங் காட்சிகளை, 'லீக்' செய்ய வேண்டாம் என்று விஜய்யின் மகன் ஜேசனின் பெயரில், ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த ஐடிக்கு கணிசமான ஃபாலோயர்கள் இருந்ததால், அது ஜேசன்தான் என ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் நம்பினர். ஜேசனின் பெயரில் வெளிவந்த பதிவு வைரலான நிலையில், அது விஜய்யின் மகன் ஜேசன் பதிவிட்டது இல்லை என்று, தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மகன் ஜேசன் எந்தவொரு சமூக வலைத்தள பக்கத்திலும் இல்லை என்றும், இதுபோன்ற போலி ஐடிக்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று விஜய் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனால், நெட்டிசன்கள் மட்டுமின்றி, விஜய் ரசிகர்களும் பலத்த ஏமாற்றமடைந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!