மீண்டும் இணையும் நடிகர் விஜய்-இயக்குனர் மோகன் ராஜா கூட்டணி

பைல் படம்.
Vijay thalapathy latest news-நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் மோகன் ராஜா இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய வேலாயுதம் படம் சூப்பர் ஹிட் ஆகியது. இதனையடுத்து இவர்களது கூட்டணி மீண்டும் எப்போதும் இணையும் என கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மற்றும் மோகன் ராஜா இணைந்து மீண்டும் படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியது. ஆனால் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
Vijay thalapathy latest news-வேலாயுதம் படத்திற்கு பிறகு நானும், நடிகர் விஜய் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசினோம். அப்போது என்னிடம் கதை தயாராக இல்லை. ஆனால், கொரோனா லாக்டவுன் நேரத்தில் 7 கதை எழுதி தயாராக வைத்துள்ளேன். எனவே நானும், விஜய்யும் விரைவில் இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu