ட்ரெண்டிங்கில் இருந்த தாதா 87 படம் ரீமேக் -அதிர்ச்சியில் தயாரிப்பாளர் விஜய்ஸ்ரீ
தாதா 87 படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது- தாதா 87 படத்தின் ரீமேக் - அதிர்ச்சியில் விஜய் ஸ்ரீ ஜி
கமலஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாஸ்வுடன் இணைந்து தயாரித்த தாதா 87 படத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என தயாரிப்பாளர்/ இயக்குனருமான விஜய் ஸ்ரீ ஜி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
தற்சமயம் பவுடர், பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன். YouTube நடிகர் சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் தாதா 87 படத்தின் ரீமேக் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் . ரஜினியின் காலா டீசருடன் தாதா 87 படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள்.
அதே டீசரில் சாருஹாசன் காட்சிக்கு பதில் சாய்குமார் சில காட்சிகள் மட்டும் படமெடுத்து இன்று டீஸராக வெளியிட்டுள்ளார்கள். இதனை பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன் 1/2 படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் திருடும் செயலில் இந்த சம்பவம் இருக்கிறது என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செய்திருப்பது சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது.
முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியல் ஐ மாற்றுவதற்கு சமமானது.என பெரியவர்கள் கூறுவார்கள். தற்போது இதுபோல் பல படங்களுக்கு தொடர்ந்து கதை திருட்டு நடைபெற்று வருகிறது .
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக தாதா 87 படத்தின் கருவை சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜு மீடியா கம்பெனி வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின் படி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் இதை பற்றி விரிவான செய்திகளை விரைவில் அறிவிப்பேன் என தயாரிப்பாளர்/ இயக்குனருமான விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.
உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை பெற்றவர் உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த 'தாதா 87' திரைப்படம்
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அந்தப் படத்தை உரிய அனுமதி வாங்காம டோலிவுட்டில் படமாக்கிட்டு இருக்காய்ங்களாம்.. அது பத்தி விசாரிக்க தாதா 87 டைரக்டர் விஜய்ஸ்ரீ-க்குக் கால் செஞ்சா தொடர்ந்து பிசியாவே இருந்துச்சு..(விசாரிச்சா நிகில் நடிச்ச பவுடர் புரோமோசன் டிஸ்கஸனில் இருக்காராம்)இப்ப விசயம் அது இல்லே..
மேற்படி தாதா 87 பட ரீ மேக் செய்ய விஜய்ஸ்ரீயிடம் உரிய அனுமதி வாங்காமல் ஷீட் பண்றதை கண்டறிஞ்சு சட்ட நடவடிக்கை எடுக்காராம் விஜய்ஸ்ரீ..
விரைவில்..
அட,..இன்னும் 24 மணி நேரத்தில் விஜய்ஸ்ரீயிடம் பேசி இந்தச் சர்ச்சைக் குறித்து முழு ரிப்போர்ட்-டை இதே , இன்ஸ்டாநியூஸ் சினிமா குழுமம் தரும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu