நேரடியாகவே ஓடிடியில் வெளியாகப்போகும் விஜய்சேதுபதியின் படம்..!

நேரடியாகவே ஓடிடியில் வெளியாகப்போகும் விஜய்சேதுபதியின் படம்..!
X
நடிகர் விஜய்சேதுபதி - நித்யா மேனன் நடித்த படம் ஒன்று ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ்த்திரையுலகின் முன்னணி நாயகனான நடிகர் விஜய்சேதுபதி, நாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்கிற கொள்கையில் ஒரு சில நடிகர்கள் உள்ள நிலையில் இவர் சற்று வித்தியாசமானவர். அதனால்தான், வில்லன் வாய்ப்பு வந்தபோது அதனைத் தட்டிக்கழிக்காமல் ஏற்று நடித்தார். விளைவு, தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்திப் பட உலகமும் அவருக்கு பலத்த வரவேற்புப் பாதையை வகுத்துக் கொடுத்துள்ளது.

அதன்படிதான், பாலிவுட் பாட்சாவான ஷாரூக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தில் முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இதனிடையேதான், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பட வெளியீட்டுத் தேதியும் வெளியாகவுள்ளது.

கருத்து சுதந்திரம் குறித்துப் பேசும் அந்தப் படத்திற்கு 19 (1) (a) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தை இயக்குநர் இந்து இயக்கியுள்ளார். விஜய்சேதுபதியும் நித்யாமேனனும் இணைந்து நடித்துள்ளனர். மலையாளப் பட உலகின் பிரபலமான ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.

விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் மிகுந்த ஆவலைத் தூண்டியதால் படம் வெளிவரும் முன்பாக அதிகப்படியான வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!