வெற்றிமாறன் என்னை ஏமாற்றி விட்டார்: விடுதலை இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி புகார்

வெற்றிமாறன் என்னை ஏமாற்றி விட்டார்: விடுதலை இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி புகார்
X

விடுதலை பட ஷூட்டிங்கில்

எட்டு நாள் ஷூட்டிங்னு கூட்டிட்டு போயி என்னை ஏமாத்தினவர் தான் வெற்றிமாறன் என விடுதலை பட ட்ரைலர் வெளியீடு விழாவில் விஜய் சேதுபதியின் கலாய்

ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரப்போகிறது. முதல் பாகம் வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 'விடுதலை' படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தவருக்கு ஒரு நிமிட அமைதி அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. இளையராஜா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மேடையில் ஏறிப் படத்தின் இசையை வெளியிட்டனர்.


விழாவில் பேசிய விஜய் சேதுபதி, சூரியோட பேச்சு உங்களை எப்படி ஆட் கொண்டதோ அதேபோலவே படம் முழுவதும் சூரியின் நடிப்பும் திறமையும் வியாபித்து இருக்கிறது. மிக அழகான ஒரு நடிகர். மிக அருமையான பேச்சு. தன் வாழ்க்கையில் நடந்ததை மிகச் சிறப்பாக கூறி விட்டீர்கள் என்று சூரியை பாராட்டினார்.

என் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் பெண்கள் அனைவர்க்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள். எனக்கு எட்டு நாள் ஷூட்டிங் கூட்டிட்டு போயி என்னை ஏமாத்தினவர் தான் வெற்றிமாறன் என்ன பொறுத்த வரைக்கும் நான் வடசென்னைல மிஸ் பண்ணிட்டேன் சரி ஓகே.

வடசென்னை படத்துல நடிக்கவில்லை என்பதால் அந்த படத்தையே நான் பார்க்கல. வெற்றிமாறனோட வேலை பார்த்து அனுபவம் மிகவும் அறிவு சார்ந்தது. இந்த படத்துக்கு எட்டு நாள் சூட்டிங் சொன்னாரு டைரக்டர். என்னைய கூட்டிட்டு போய் எட்டு நாள் ஆடிஷன் பண்ணி இருக்கிறார். அங்க கழிப்பிட வசதி கிடையாது. தங்க வசதி கிடையாது. அப்படி இருந்தும் படத்த எடுத்து முடிச்சோம்.


அப்போது கூட்டத்திலிருந்து ரசிகர்கள் வட சென்னை 2 எப்போது வரும் என கேட்டனர். அதற்கு, "வெற்றிமாறன் கதை எழுதிக் கொண்டிருக்கிறார் விரைவில் வரும்," என்றார்.

பின்பு மேடையில் அமர்ந்திருந்த வெற்றிமாறனை பார்த்து, "யூட்யூபில் யார் யாரோ ஏதேதோ சொல்கிறார்கள் நானும் சொல்கிறேன்," என்றார். அதற்கு வெற்றிமாறன் குலுங்கி குலுங்கி சிரித்தார்

Tags

Next Story