புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி பிரியாமணி?

நடிகர் விஜய் சேதுபதி (பைல் படம்)
Sethupathi New Movie - அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா. பெரிய வரவேற்பை பெற்ற புஷ்பா உலகளவில் வசூலிலும் சாதனையை குவித்தது. இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜூன் மாஸ் இந்தியளவில் இரட்டிப்பு ஆகியுள்ளது என்றே கூறலாம்.
அப்படியான இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சமந்தா குத்தாட்டம் போட அந்த பாடல் அகில உலக அளவில் ஹிட்டானது. அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி தற்போது விஜய் சேதுபதிக்கே அப்படத்தில் ஜோடி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. மேலும், புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இன்னும் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் தற்போது இப்போது இப்படியொரு தகவல் இணையத்தில் வைரலாக வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu