'டிஎஸ்பி'க்கு 'ரெஸ்பான்ஸ்' இல்லை; 'ரிலீஸ்'க்கு முன்பே வந்தது 'ரிசல்ட்'

டிஎஸ்பிக்கு ரெஸ்பான்ஸ் இல்லை; ரிலீஸ்க்கு முன்பே வந்தது ரிசல்ட்
X

 vijay sethupathi news - நடிகர் விஜய் சேதுபதி.

vijay sethupathi news-நாளை ரிலீஸ் செய்யப்படும் 'டிஎஸ்பி'யை காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. படம் 'ரிலீஸ்' ஆகும் முன்பே, படத்தின் 'ரிசல்ட்' வந்துவிட்டதாக, கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

vijay sethupathi news, vijay sethupathi latest news- 'மக்கள் செல்வன்' என அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதிக்கு, கைவசம் இப்போது நிறைய படங்கள் உள்ளன. தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியிலும் எக்கச்சக்கமான படங்களை வைத்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இப்போது விஜய் சேதுபதியின் 46 ஆவது படமான, 'டிஎஸ்பி' படம் டிசம்பர் 2ம் தேதி, நாளை வெளியாக உள்ளது.


இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், வழக்கமாக விஜய் சேதுபதி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்படும் ஆரவாரம், 'டிஎஸ்பி' படத்திற்கு இதுவரை இல்லையாம்.

ஏற்கனவே விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் நடித்து வெளியான 'சேதுபதி' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திலும், உயர் போலீஸ் அதிகாரி 'டிஎஸ்பி' ஆகத்தான் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்போது இந்த படத்திற்கான 'புக்கிங்' தொடங்கப்பட்ட நிலையிலும், தியேட்டர்களில் டிக்கெட் வாங்க யாருமே வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.


இதற்கான காரணம் என்னவென்றால், 'டிஎஸ்பி' படத்தின் 'ப்ரோமோஷன்' கடந்த வாரம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தார். இந்த படவிழாவில், உலக நாயகனே கலந்து கொண்டாலும் மக்கள் மத்தியில் இந்த படம் சென்றடையவில்லை.

ஏனென்றால் இதை எந்த 'சாட்டிலைட்' சேனலும் வாங்க முன் வரவில்லை. மாறாக 'யூடியூப்' சேனல் தான் வாங்கி வெளியிட்டது. ஆகையால்தான், டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டும், யாருமே வாங்க வரவில்லையாம். இதனால், படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்பே, படத்தின் முடிவு தெரிந்துவிட்டது என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இப்போதெல்லாம் படத்துக்கு செய்யப்படும் விளம்பரங்களும், 'ப்ரொமோ'வும்தான், படத்தின் பாதி வெற்றியை தீர்மானிப்பதாக உள்ளது. அதனால், 'டிஎஸ்பி'க்கு சேனல்களில் முக்கியத்துவம் இல்லாததால், படத்துக்கு 'கிராக்கி' வரவில்லை, என்றும் கூறப்படுகிறது.


நடிகர் விஜய் சேதுபதியின் 'டிஎஸ்பி' படம் வெளியாவதற்கு முன்பு, தோல்வி உறுதியாகியுள்ளது என பலரும் கூறி வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதி, இதிலிருந்த எவ்வாறு மீண்டு வரப்போகிறார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்தச் செய்தி விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், சில படங்கள் இப்படி துவக்கத்தில் ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டு, பின்பு திரையிட்ட சில தினங்களில் 'பிக்கப்' ஆகி, நல்ல வசூலை தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், படம் ரிலீஸ் ஆன பின்பு, இந்த நிலை மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், படத்துக்கான ஆரம்பம் என்பது ஏமாற்றம் அளித்துள்ளது, படக்குழுவினரையும் சற்று ஏமாற்றமடையவே செய்துள்ளதாக பேசப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!