வில்லன் வேடத்தில் கவனம் செலுத்தும் விஜய்சேதுபதி..!

வில்லன் வேடத்தில் கவனம் செலுத்தும் விஜய்சேதுபதி..!
X
விஜய்சேதுபதி 'புஷ்பா-2' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து வில்லன்கேரக்டரில் தீவிரம்காட்டி வருகிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதி வில்லன் கேரக்டரில் நடிப்பில் ச்சும்மா தெறிக்கவிட்டிருப்பார். விஜய்சேதுபதி தோன்றும் காட்சிகளில் அவரது ரசிகர்களின் விசில் சத்தமும் கைத்தட்டல்களும் காதைப் பிளந்தன.

நாயகனாக இருந்தாலும் சரி… வில்லனாக இருந்தாலும் சரி… கேரக்டர் ரோல்களாக இருந்தாலும் சரி… அவற்றில் ஒன்றி தன்னை முழுமையாக அடையாளப்படுத்தி அசத்துவார் விஜய்சேதுபதி. தமிழைத்தாண்டி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிப்படங்களிலும் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி.

இந்தநிலையில் இவர், கடந்த சில ஆண்டுகளாக நாயகனாக நடிப்பதைவிட வில்லனாக நடிப்பதில் தீவிரமான ஆர்வம் காட்டி வருகிறார். ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' விஜய் நடித்த 'மாஸ்டர்' ஆகிய திரைப்படங்கள் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த முக்கியத் திரைப்படங்கள் என்பதும் இவை மூன்றுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்து 'புஷ்பா- 2' படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியுடன் படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 35 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நாயகனாக நடிக்க வாங்கும் சம்பளத்தைவிட இருமடங்கு சம்பளம் வில்லனாக நடிக்க வாங்கி இருப்பதாகவும் கோடம்பாக்கத்து பேச்சுகள் ரவுண்டு கட்டுகிறது.

ஏற்கெனவே 'புஷ்பா' படத்தில் முதலில் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியை அணுகியதாகவும், சில காரணங்களால் அவர் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறப்படுவது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்