Vijay Vs Ajith அதிக சம்பளம் வாங்குவது யார்?

Vijay Vs Ajith அதிக சம்பளம் வாங்குவது யார்?
X
விஜய், அஜித் இருவரில் அதிக சம்பளம் வாங்குவது யார் என விவாதம் நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்கிற போட்டி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் அதிக சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த நிலையில் அந்த இடத்தைப் பிடித்தவர் விஜய். தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது விஜய்தான். அவருக்கு போட்டியாளராக இருக்கும் அஜித் அவரைவிட 20 - 25 கோடிகள் குறைவாகவே சம்பளம் பெற்று வருகிறார்.

விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் டிவிட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். அதில் பெரும்பாலும் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த சண்டைகளே அதிகமாக இருக்கும். அதிலும் விஜய் ரசிகர்கள் அஜித் படங்களின் வசூல் என்பது வடை எனவும், அஜித் ரசிகர்கள் விஜய் படங்களின் வசூல் என்பது பொய் என்பதுபோலவும் பேசுவார்கள்.

இந்நிலையில், தற்போதும் அந்த பேச்சு எழுந்துள்ளது. லியோ படத்துக்கான வசூல் என்பது பொய் என அஜித் ரசிகர்கள் பேசி வருகின்றனர். அதற்கு பதிலடியாக அஜித் திரைப்படங்களை கைவிட்டுவிட்டு ஊர் சுற்ற பைக்கில் கிளம்பிவிட்டதாக விஜய் ரசிகர்கள் பேசி வருகின்றனர். அடுத்த கட்டத்துக்கு போய் அடுத்த படங்களுக்கு இருவரும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்கிற வாதம் வந்துவிட்டது.

தற்போது விஜய் லியோ படத்தை முடித்துக் கொண்டு வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில் சென்னையில் இரண்டாவது ஷெட்யூல் நடந்தது. இப்போது அதுவும் முடிந்து துருக்கி சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் மிக முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் இடம்பெறவுள்ள முக்கியமான பாடல் காட்சி ஒன்றையும் அங்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 68 படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் டம்மி லிரிக்ஸ் போட்டு ஷூட்டிங் நடைபெற்று முடிந்துவிட்டது எனவும், நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் வருவதால் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் 5 முதல் 6 மாதங்கள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய் இந்த படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் வாரிசு படத்துடன் வெளியான துணிவு படம் சம அளவு வெற்றி என்றாலும், அஜித்குமார் நடிக்கும் அடுத்த படம் தொடங்கப்படாமலே இருந்தது. ஒருவழியாக படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டு, இப்போது ஷூட்டிங்கும் 45 சதவிகிதம் அளவுக்கு முடிந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. பின் துபாயிலும் நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இந்த படத்துக்கு அஜித் 165 முதல் 175 கோடி ரூபாய் அளவுக்கு பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய்யை விட 25 கோடி ரூபாய் அளவுக்கு குறைவான சம்பளத்தையே அஜித் பெறுகிறார் என விஜய் ரசிகர்கள் சமர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!