Thalapathy 68 படத்தில் விஜய் பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Thalapathy 68 படத்தில் விஜய் பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தளபதி 68 படத்தில் விஜய் வாங்கப்போகும் சம்பளம் 100 கோடி ரூபாய்க்கும் மிக அதிகமாம்.

விஜய் அடுத்து நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு எவ்வளவு கோடி ரூபாய் சம்பளம் தரப்படவுள்ளது என்பதை தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆவீர்கள். தளபதி 68 படத்துக்காக ஏஜிஎஸ் நிறுவனத்திடம் அவர் வாங்கியுள்ள அட்வான்ஸ் மட்டுமே 25 கோடி ரூபாய் என்கிறார்கள்.

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா, பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார்களாம். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய்யும், வில்லனாக எஸ் ஜே சூர்யா அல்லது அரவிந்த் சாமி இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

லியோ ரிலீஸ்

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களே லோகேஷ் கனகராஜ், விஜய் இணைப்பில் உருவாகி வரும் லியோ பட வெளியீட்டுக்கு காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய், வெங்கட்பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார்.

வெங்கட்பிரபுவும் தளபதி விஜய்யும் எப்போது இணைவார்கள் என கடந்த 10 ஆண்டுகளாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு வேற லெவலுக்கு மார்க்கெட் எகிறிவிட்டது. இதனால் விஜய்யுடன் இணையும் படம் இப்போதே பல லாப கணக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டது.

தளபதி 68 ஹீரோயின்

திருமலை படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டம் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரியங்கா அருள் மோகனும் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் சமந்தா, தமன்னா, நயன்தாரா ஆகிய மூவரில் ஒருவர் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இதனை மறுத்திருந்தார். பின்னர் விரைவில் பல அப்டேட்டுகள் வரும் எனவும் அவை மிகப் பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

தளபதி 68 ரகசியங்கள்

தளபதி 68 படத்தில் விஜய், ஜோதிகா, பிரியங்கா மோகன் என இன்னும் பல நட்சத்திரங்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் விஜய்க்கு எத்தனை கதாபாத்திரங்கள், விஜய்க்கு ஜோடி ஜோதிகாவா இல்லை பிரியங்காவா என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர். அதேநேரம் இதுகுறித்து அதிக விசயங்களை பேசக்கூடாது என முடிவெடுத்துள்ள தளபதி 68 படக்குழு முக்கியமாக இயக்குநர் வெங்கட் பிரபு வெளியில் வருவதையே நிறுத்திவிட்டாராம்.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரியங்கா மோகன் சூர்யாவுடனும் நடித்தார். இப்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கேட்டிருக்கிறார்களாம்.

வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தம் ஆகாத நிலையில் கண்டிப்பாக விஜய் படத்துக்கு ஓகே சொல்லிவிடுவார் என்றே கூறுகிறார்கள். விஜய்க்கு ஜோடியாக யார் நடித்தாலும் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி பக்காவாக செட் ஆகிவிடும். அந்த வகையில் விஜய்யுடன் பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படமும் பக்காவானதாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சம்பளம்

தளபதி 68 படத்தில் விஜய்க்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். அதில் 25 கோடி ரூபாய் முன்பணமாக ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டதாம். வரும் அக்டோபரில் துவங்கும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story