200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்? உண்மை என்ன?

200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்? உண்மை என்ன?
X
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், இயக்குநர் கௌதம், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இவர்களின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சிலரைத் தவிர்த்து மற்ற நடிகர்கள் அனைவரும் வெற்றிப்படங்களுக்கு பிறகு சம்பளத்தைக் கூட்டுவதும், தோல்விப்படங்களுக்கு பிறகு சம்பளத்தை குறைக்காமல் இருப்பதும் இயல்பாக இருக்கிறது. அதிலும் விஜய் முந்தையப் படங்களின் வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாது அடுத்தடுத்து படங்களுக்கு தனது சம்பளத்தைக் கூட்டிக் கொண்டே செல்கிறார்.

3 படங்களுக்கு முன்னர் வரை 100 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிய விஜய் அடுத்து 115 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்பட்டது. வாரிசு படத்துக்கு 120 கோடி சம்பளம் வாங்கியிருந்தாராம். அடுத்து லியோ படத்துக்காக அவரது சம்பளம் 130 கோடி என்கிறார்கள். இப்போது மீண்டும் தனது சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார் விஜய். இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை என்றாலும் கோலிவுட்டில் விஜய்யின் சம்பளம் இதுதான் என பெரிய தொகை ஒன்றை வட்டமிட்டு காட்டுகின்றனர்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், இயக்குநர் கௌதம், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

லியோ படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால் பின்னர் வெளியான தகவலின்படி அவர் விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறாராம்.

இந்த படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த படத்தின் ஷூட்டிங்கை ஜூன் 15ம் தேதியுடன் முடித்துவிட்ட விஜய் ஓய்வுக்கு செல்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

விஜய் - வெங்கட்பிரபு இணையும் தளபதி 68 படத்துக்கு விஜய் சம்பளமாக 150 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருந்தாலும் தளபதி 68 படமாக எது வந்தாலும் அந்த படத்துக்காக விஜய் வாங்கப்போகும் சம்பளம் 150 கோடி ரூபாய் என்கிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!