பாலிவுட்டில் சம்பவம் பண்ண போகும் விஜய்! அட்லீயை வைத்து போட்ட தெறி பிளான்!

பாலிவுட்டில் சம்பவம் பண்ண போகும் விஜய்! அட்லீயை வைத்து போட்ட தெறி பிளான்!
X
தளபதி 67, 68, 69க்கு பிறகு பாலிவுட்டில் விஜய் எடுத்து வைக்கும் அடி! இந்திய சினிமாவே மிரளும் சாதனை

அட்லீய வச்சி விஜய் போட்ருக்குற ஒரு சூப்பர் பிளான் மட்டும் ஒர்க்கவுட் ஆச்சின்னா.. விஜய்தான் இனி இந்தியாவுலேயே நம்பர் 1..

எப்டி எப்டி எப்டினு வடிவேலு பார்த்திபன்கிட்ட கேட்டமாரி பறக்காதீங்க. கொஞ்சம் பொறுமையா கேளுங்க.

பாலிவுட்ல மாஸ் காட்டிக்கொண்டிருக்காரு அட்லீ. பாட்ஷா ஷாருக்கானையே வேற லுக்ல காட்டி, மிரட்டிட்டாரு. கோலிவுட்ல இருந்து போயி சம்பவம் பண்ண அட்லீக்கு பின்னாடி தளபதி விஜய் ஒரு கணக்கு வச்சிருக்காராம் தெரியுமா?

அது என்ன கணக்குன்னு பின்னாடி பாப்போம். முன்னாடி இன்னொரு விசயத்த சொல்றேன் கேளுங்க. இந்தியாவ தாண்டி உலக அளவுல ஷாருக்கானோட ஜவான் படம் வைரலோ வைரல். வேற லெவலுக்கு எக்ஸ்பட்டேஷன் எகிறி போயி கிடக்கு. வெறும் பிரிவியூவுக்கே இந்த மாதிரி வரவேற்பு கிடச்சத ஷாருக்கானே எதிர்பார்க்கலையாம்.

ஹிந்தி பெல்ட்ல நம்ம மாஸ்தான். ஆனா தென்னிந்தியாவுல நாம இறங்கி அடிக்கணும்னா விஜய்ய எப்படியாச்சும் நம்ம படத்துல இழுத்து போடணும்னு ஒரு கணக்கு போட்டாரு நம்ம ஷாருக். ஏற்கனவே நம்ம தலைவர் ரஜினிகாந்துக்கு லுங்கிய கெட்டி உட்டு லுங்கி டான்ஸ் ஆட வச்சி தன்னோட படத்துக்கு வேல்யூ ஏத்தினமாதிரி இந்த தடவ அட்லீய வச்சி தளபதி விஜய்க்கு நூல் போட, அது என்ன ஆச்சுங்குறது சஸ்பென்ஸ்.

விஜய்ய கூட்டி வரச் சொன்னா விஜய் சேதுபதிய கூட்டி வந்திருக்கங்குற மாதிரி ஜவான் படத்துல சூப்பரான ரோல்ல நடிச்சாலும், ஷாருக் எதிர்பார்த்த அளவுக்கு தென்னிந்தியாவுல சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். சரி விஜய் சேதுபதி, நயன்தாரானு பெரிய நடிகர்கள போட்டும் ரசிகர்கள் திருப்தி ஆகலையேனு யோசிச்ச ஷாருக், சென்னைல ஒரு விழாவ நடத்தி அதுல விஜய்ய கலந்துக்க வைக்கப்போறாராமுங்கோ.

எப்டி பாத்தாலும் நம்ம பிசினஸ் சக்ஸஸ்தான்ன்னு ஷாருக் திட்டம் போட, இந்த பக்கம் அத விட பக்காவான ப்ளான போட்டு ஆல் ஏரியாவுலயும் அண்ணன் கில்லினு காட்ட வராரு தளபதி விஜய்.

அட்லீய பாலிவுட்ல பேமஸ் ஆக்கி அவர வச்சி அடுத்த படத்த பான் இந்தியாவா ஷாருக்கான் மூலமா ஹிந்தி பெல்ட்லயும் கொண்டு போகறதுதான் தளபதி விஜய்யோட இந்த திட்டம். இதுல கிட்டத்தட்ட அவரு ஜெயிச்சிட்டார்னே சொல்லலாம்.

ஜவான் படத்தோட பிரிவியூ வீடியோவுக்கே வேற லெவல்ல மக்கள் வரவேற்பு குடுக்குறாங்க. கேரளா, தமிழ்நாட்டுல கூட படத்துக்கு எதிர்பார்க்கு இருக்கு. எப்பவும் ஜெயிக்குற மசாலா எண்டர்டெய்ன்மெண்டோட ஷாருக்கோட ஆக்ஷனும் அதிரடி நடிப்பும் சேர்ந்த கலவையா ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கு ஜவான் படக்குழு.

ஹிட்டுனா சொன்னேன்.. பிளாக்பஸ்டர்... இந்தியா இதுவரைக்கும் காணாத ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டாக போகுது ஜவான்.

அப்ப இன்னைக்கு தேதிக்கு இந்தியாவுலேயே அதிக சம்பளம் வாங்குற இளம் இயக்குநரா அட்லீ இருப்பாரு.. அவரோட அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்??

நம்ம தளபதி ஸ்டைல்ல சொன்னா... I am waiting.....

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!