விஜய் பட கதாநாயகியின் முதல் பாலிவுட் படம் அக்டோபரில் ரிலீஸ்

விஜய் பட கதாநாயகியின் முதல்   பாலிவுட் படம் அக்டோபரில் ரிலீஸ்
X

Rashmika Mandanna’s bollywood debut movie release date - விஜய் பட கதாநாயகியின் முதல் பாலிவுட் படம் அக்டோபரில் ரிலீஸ்

Rashmika Mandanna's bollywood debut movie release date - நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முதல் பாலிவுட் படம் வெளியாவதற்கு முன்னரே, அவர் பாலிவுட் திரையுலகில் பிஸியான நடிகை ஆக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rashmika Mandanna's bollywood debut movie release date - தளபதி விஜய் உடன் 'பிரின்ஸ்' படத்தில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி இருக்கும் 'குட் பை' படம், அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. மரக்கடத்தலை மையமாகக் கொண்ட இந்த படத்தில் இடம்பெற்ற 'ஏலே சாமி' பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

Rashmika Mandanna's bollywood debut - கோலிவுட்டில், கார்த்தி உடன் 'சுல்தான்' படத்தில் நடித்த ராஷ்மிகா, அடுத்ததாக, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விஜய்க்கு ஜோடியாக பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் கால்தடம் பதித்துள்ளார். தனது முதல் படத்திலேயே 'பிக் பி' அமிதாப் பச்சன் உடன் நடித்துள்ளார். விகாஷ் பால் இயக்கத்தில் அமிதாப் பச்சன், நீனா குப்தா உள்ளிட்ட திரைநட்சத்திரங்களுடன் உருவாகியுள்ள ராஷ்மிகா மந்தனாவின் முதல் பாலிவுட் படமான 'குட் பை' படம், வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படம், காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

Rashmika Mandanna's bollywood debut - இந்தப் படத்தை தொடர்ந்து, ராஷ்மிகாவின் நடிப்பில் 'மிஷன் மஜ்னு' படம் வெளியாக உள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், மிஷன் மஜ்னு படத்தில் தான், ராஷ்மிகா, நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார். பல்வேறு காரணங்களால், இந்தப்படம், ராஷ்மிகாவின் இரண்டாவது பாலிவுட் படமாக அமைந்து விட்டது.இதனையடுத்து, ரன்பீர் கபூர் உடனான 'அனிமல்' படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முதல் பாலிவுட் படம் வெளியாவதற்கு முன்னரே, அவர் பாலிவுட் திரையுலகில் பிஸியான நடிகை ஆக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!