தேர்தலில் வென்ற விஜய் மன்றத்தினர் : நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

தேர்தலில் வென்ற விஜய் மன்றத்தினர் : நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
X

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் ரசிகர் மன்றத்தினர், நடிகர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மன்றத்தினர், நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த நிர்வாகிகள் நடிகர் விஜயை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில்:-
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட நிர்வாகிகளை வெற்றியடைய செய்த மக்களுக்கு நடிகர் விஜயின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 129 நபர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 நபர்களும், துணை தலைவர் பதவிக்கு 12 நபர்களும் மற்றவர்கள் வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வெற்றிபெற்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆல் தி பெஸ்ட் என சொல்லியுள்ளார்.
வெற்றி பெற்றவர்களிடம், மத்திய மாநில அரசிடம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு மக்களுக்கு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறுத்தியதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த 11 அம்சம் கொண்ட திட்ட படிவத்தை அளித்துள்ளதாகவும்
இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தளபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
விஜயை சந்திக்க மிக ஆவலாக வந்த ரசிகர்களை விஜய் சந்திக்காமல் சென்று விட்டார். இதற்கிடையே அவரது ரசிகர்கள் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜயின் கையசைவையாவது பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடினர். பின்னர் போலீசார் அவர்கள் கலைத்து விட்டனர்.
விஜயை பார்க்க வந்த சிலர் காலை முதல் காத்திருந்ததால் மயக்கடைந்து கீழே விழுந்தனர் இதனால் அதிருப்தியில் அங்கிருந்து சென்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!