காஷ்மீரில் லியோ... விஜய், கௌதம் மேனன், அன்பறிவ்.. வேற லெவல்ல ஒன்னு சிக்கிருக்கு!

காஷ்மீரில் லியோ... விஜய், கௌதம் மேனன், அன்பறிவ்.. வேற லெவல்ல ஒன்னு சிக்கிருக்கு!
X

தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்பட படப்பிடிப்பு

விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படம் உருவாகிவருகிறது. இதில் விஜய்யுடன், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தற்போது இந்த படக்குழுவின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதி விஜய்யை இயக்கி வருகிறார். லியோ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் தளபதியின் 67வது படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. முன்னதாக சென்னை மற்றும் கொடைக்கானலில் இரண்டு கட்ட குறுகிய படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னையில் விஜய் நடிக்கும் காட்சிகளும் கொடைக்கானலில் மன்சூர் அலிகான் காட்சிகளும் படம் பிடிக்கப் பட்டதாக கூறுகிறார்கள்.

தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஜய், கௌதம் மேனன், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கேங்க்ஃபயரில் இசை நிகழ்ச்சியோட நிற்கிறார்கள் போலத் தெரிகிறது. இந்த புகைப்படம் நேற்று லோகேஷ் கனகராஜால் பகிரப்பட்டது. சில நொடிகளில் சமூக வலைத்தளங்கள் முழுக்க பரவி வைரலானது.

விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!