லியோவுடன் மோதும் இந்தியன் 2! உண்மை என்ன?

லியோவுடன் மோதும் இந்தியன் 2! உண்மை என்ன?
X

தளபதி விஜய்யின் லியோ, கமல்ஹாசனின் இந்தியன் 2

பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, லியோ, ஜெயிலர், அஜித்குமார் 62, சூர்யா 42 உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப் பெரிய வசூலை பெற வரிசை கட்டி நிற்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு கொண்டு வருவது என உறுதியாக நிற்கும் நிலையில், இந்தியன் 2 படமும் லியோ படமும் ஒரே நேரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை, இப்படி வெளியானால் எந்த படம் பெரிய அளவில் வசூலிக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

2023ம் ஆண்டு தொடங்கும்போதே இந்த வருடம் மிகப் பெரிய ஆண்டாக இருக்கும் என்பதை கணித்திருக்கும் கோலிவுட். கோலிவுட்டில் இந்த ஆண்டு வெளியாகும் படங்களைப் பார்த்தால் ஒரு பிரம்மிப்புதான். தமிழ் சினிமாவின் பிசினஸ் வேறு லெவலுக்கு முன்னேறி விட்டது.

இதனால் பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, லியோ, ஜெயிலர், அஜித்குமார் 62, சூர்யா 42 உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப் பெரிய வசூலை பெற வரிசை கட்டி நிற்கிறது.

ஆரம்பத்தில் தளபதி 67 படத்துடன் அஜித்குமார் 62 படம் மோதும் என தகவல் வெளியானது. ஆனால் அதற்கு இப்போது வழி இல்லாமல் போய்விட்டது. காரணம் லியோ படத்தை வெளியிடும் நாளையே இப்போது அறிவித்துவிட்டார்கள். அக்டோபர் மாதம் ஆயுதபூஜை விடுமுறை தினங்களில் அந்த படம் வெளியாக காத்திருக்கிறது. இந்த பக்கம் அஜித்குமார் படத்தின் இயக்குநரே யார் என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால் படம் தீபாவளிக்கு வருமா என்பதே சந்தேகம்தான்.

மறுபுறம் ஜெயிலர் படத்தை பல வாரங்களாக குக்கிங் செய்து கொண்டிருக்கிறார் நெல்சன். இந்த படத்துடன் பல மாதங்களாக ஷங்கர் செதுக்கிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்துடன் மோத விடலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். வரும் தீபாவளிக்கு இரண்டு படங்களும் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் ஜெயிலர் படம் தீபாவளிக்கு வரலாம் ஆனால் ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் இந்தியன் 2 படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்துடன் எப்படி மோதும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை முன்கூட்டியே ஜெயிலர் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் தயாராக இருக்கும். இல்லையென்றால் இந்தியன் 2 முன்னரே வெளியாக வேண்டி வரும். அப்படியிருக்கும்பட்சத்தில் இந்தியன் 2 தீபாவளிக்கு வருவதென்றே வைத்துக் கொள்வோம்.

லைகா தயாரிப்பான இந்தியன் 2, அதே தினத்தில் லைகா தயாரிப்பான அஜித்குமார் 62 படத்துடன் எப்படி மோதும். இதனால் இந்தியன் 2 முன்னாடியே ரிலீஸாக வாய்ப்பிருக்கிறது.

இந்தியன் 2 முன்னாடியே வெளியானால் அது ஆயுத பூஜை விடுமுறை தினங்களைத் தானே குறிவைக்கும். இதனால்தான் லியோ படத்துடன் இந்தியன் 2 மோதுவது கணிக்கப்படுகிறது. ஒருவேளை பண்டிகை தினங்கள் இல்லாமல் இடையில் கூட படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. எது எப்படியோ கோலிவுட்டில் மீண்டும் மீண்டும் மோதி லாபத்தைக் குறைத்துக் கொள்ள எந்த தயாரிப்பாளரும் யோசிக்கமாட்டார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!