தமிழக வெற்றிக் கழகம்... வந்தாச்சு செயலி.. உறுப்பினரான விஜய்..!

தமிழக வெற்றிக் கழகம்... வந்தாச்சு செயலி.. உறுப்பினரான விஜய்..!
X
அதற்கான வேலைகளை தொடங்கி, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். கட்டமைப்புகளை வலுப்படுத்தி, கட்சியில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியில் முதல் ஆளாக அவரே சேர்ந்து அதற்கான உறுப்பினர் அட்டையை மகளிர் தினமான இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இன்று முதல் கட்சியில் சேர விரும்புபவர்களின் தகவல்கள் பெறப்பட்டு அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை கொடுக்கப்பட இருக்கிறது.

மகளிர் தினம் உலகம் முழுக்க மார்ச் 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் பெண்களைக் கொண்டாடுவோம் என அவர்களின் சாதனைகள் முதல் சோதனைகள் வரை அனைத்தையும் வெளிக்காட்டி வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் பலர் பேசி வருகின்றனர். இந்த நாளில், நடிகர் விஜய் தற்போது தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் செயலியை அறிமுகம் செய்து வைத்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் தனது அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த நாள் முதல் இன்று வரை விஜய் ரசிகர்கள் இந்த கட்சி குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 2026ல் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்றும், இவர்கள் செய்த அநியாயங்கள், ஊழல்கள் அனைத்தையும் குறித்து பேசுவோம் என்றும் விஜய் ரசிகர்களான தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அரசியல் செய்து வருகின்றனர்.

அரசியல் கட்சியில் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரையும் கொண்டு வர வேண்டும் என விஜய் விரும்புகிறார். கட்சியில் இருக்கும் நபர்கள் மக்களிடம் களத்தில் இறங்கி பேசி, அவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அவரது தொண்டர்களிடம் பேசியுள்ளார் விஜய்.

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதில் பெருவாரியான தொகுதிகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் கைப்பற்றி வெற்றியுடன் சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என விஜய் விரும்புகிறார். அதற்கான வேலைகளை தொடங்கி, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். கட்டமைப்புகளை வலுப்படுத்தி, கட்சியில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு, மாநிலச் செயலாளர் சி விஜயலட்சுமி, மாநில இணைச் செயலாளர் எஸ் என் யாஸ்மின், மாநில பொருளாளர் வி சம்பத் குமார், மாநிலத் துணைச் செயலாளர் ஏ விஜய் அன்பன், மாநிலத் துணைச் செயலாளர் எம் எல் பிரபு ஆகிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வயதான மற்றும் இளமையான தோற்றத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்துக்கான கெட்டப்பிலேயே இந்த வீடியோவில் தோன்றியுள்ளார் விஜய். அதில் தான் இந்த கட்சியில் முதல் ஆளாக சேர்ந்துள்ளதாகவும், தமிழக மக்களுக்காக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் தாரக மந்திரத்தோடு அனைவரும் சமம் எனும் நோக்கில் கட்சி ஆரம்பித்திருக்கிறதாகவும் கூறியுள்ள அவர் உறுப்பினர் அட்டையையும் காண்பித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!