விஜய்யா? சிம்புவா? ஜெயிக்கப்போவது யாரு?

விஜய்யா? சிம்புவா? ஜெயிக்கப்போவது யாரு?
X
சிம்புவை இன்ஸ்டாவில் 11 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்த ரெக்கார்டை விரைவில் விஜய் முறியடிப்பார் என்று கூறுகிறார்கள். தமிழின் நம்பர் 1 நடிகர் விஜய்தான். அது சினிமாவாக இருந்தாலும் சரி சோசியல் மீடியாவாக இருந்தாலும் சரி என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது படங்கள் பல கோடிக்கு பிசினஸ் செய்யப்படுகின்றன. நாளுக்கு நாள் இவரின் படங்கள் மீதான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே வருகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களைக் கொண்ட இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளார்.

மாஸ்டர், வாரிசு என மிகப் பெரிய படங்களில் தொடர்ந்து நடித்து வளர்ச்சியை அதிகப்படுத்தி வரும் விஜய், இப்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்க இருக்கிறது.

இதுவரை டிவிட்டரில் இருந்த விஜய், தற்போது முதல் முறையாக இன்ஸ்டாகிராம் கணக்கை திறந்துள்ளார். ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே போட்டிருக்கும் அவருக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்கள் சில மணி நேரங்களில் வந்துள்ளனர்.

டிவிட்டர் கணக்கை வைத்திருக்கும் விஜய் தற்போது திடீரென்று இன்ஸ்டாவில் நுழைந்திருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே ஒரு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறார் விஜய். இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிக ஃபாலோவர்களை வைத்திருப்பது நடிகர் சிம்புதான். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அப்டேட்டாக வைத்திருப்பார். இந்நிலையில் விஜய் வந்துவிட்டதால் இந்த சாதனை முறியடிக்கப்படும் என சிம்பு ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

சிம்புவை இன்ஸ்டாவில் 11 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்த ரெக்கார்டை விரைவில் விஜய் முறியடிப்பார் என்று கூறுகிறார்கள். தமிழின் நம்பர் 1 நடிகர் விஜய்தான். அது சினிமாவாக இருந்தாலும் சரி சோசியல் மீடியாவாக இருந்தாலும் சரி என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் பலர் பாட் வைத்து தனது ஃபாலோவர்கள் கணக்கை ஏற்றிக் காட்டுவதாக குற்றச்சாட்டுகளும் இங்கு எழுந்து வருகின்றன.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!