/* */

ராஷ்மிகாவை காதலிக்கிறாரா விஜய் தேவரகொண்டா? அவரே கூறிய பதில்

Vijay Deverakonda Rashmika Mandanna - விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் அது பற்றி இதுவரை வெளிப்படையாக பேசியதே இல்லை.

HIGHLIGHTS

ராஷ்மிகாவை காதலிக்கிறாரா விஜய் தேவரகொண்டா? அவரே கூறிய பதில்
X

Vijay Deverakonda Rashmika Mandanna -தென்னிந்தியா சினிமாவில் மிகவும் வசீகரமான ஹீரோக்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அதிகம் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வந்தாலும், இவர் ராஷ்மிகாவை இவர் காதலிக்கிறாரா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்த போது, அவர்களது காதல் காட்சிகள் மற்றும் லவ் கெமிஸ்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுவே இவர்கள் காதல் வதந்தியை சிக்க காரணமாகவும் இருந்தது.

இவர்கள் காதல் குறித்த வதந்தி நீண்டகாலமாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை இருவருமே தொடர்ந்து மறுத்து வந்தனர்.


விஜய் தேவரகொண்டா தற்போது லைகர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார். அவர் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே உடன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் லைகர் படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் தேவரக்கொண்டாவிடம் அவரது காதல் கிசு கிசு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அது எனக்கு ஓகே தான். பப்ளிக் பிகர் ஆக இருப்பதால் இதுபோல கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும். மக்கள் உங்களை விரும்புகிறார்கள் என்றால் உங்களது சொந்த வாழ்க்கை பற்றியும் அவர்கள் அறிந்துகொள்ள விரும்புவார்கள். என்னை பற்றி செய்திகள் வருகிறது என்றால், எனக்கு ஓகே தான்."

எதுவும் செய்திகள் வராமல் இருப்பதற்கு பதில், ஏதோ கிசுகிசுவாக வருவதும் நல்லது தான். அதனால் அதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை என விஜய் தேவரகொண்டா தெரிவித்து இருக்கிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Aug 2022 8:55 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...