விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடிப்படம் 'ரத்தம்'..!

விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடிப்படம் ரத்தம்..!
இயம்குநர் சி.எஸ்.அமுதன் முதன் முறையாக ஆக்‌ஷன் படத்தை இயக்குகிறார். நாயகன் விஜய் ஆண்டனி. மூன்று நாயகிகள் இவருக்கு ஜோடி.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'ரத்தம்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுவரையில் காமெடி கதைக்களத்தில் மட்டுமே திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குநர் சி.எஸ்.அமுதன், தற்போது முதன் முறையாக 'ரத்தம்' படத்தின் மூலம் முழுமையான ஆக்‌ஷன் பட இயக்குநராகக் களமிறங்கிறார்.

இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள கேரக்டர்களின் போஸ்டர்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தநிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று(ஜூலை 23-ம் தேதி) வெளியாகிறது என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ரத்தம் தெறிக்க உருவாகி வரும் இப்படத்தில் நாயகனாக நடிக்கும் விஜய் ஆண்டனிக்கு, ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மஹிமா நம்பியார் என மூன்று நாயகிகள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஜெகன், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ், சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Tags

Next Story